Thursday, October 25, 2018

Metoo . சபாஷ் மியூசிக் அகாடெமி . . .




மியூசிக் அகாடெமி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால் பாராட்டத் தக்க ஒரு முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள்.

#Metoo சர்ச்சையில் பல சங்கீத வித்வான்கள்  மீதும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கள் வந்ததை சமூக ஊடகங்கள் பெரும்பாலும் மௌனமாகவே கடந்து போயிருந்தது. அவர்கள் வைரமுத்து போல அவ்வளவு பெரிய பிரபலங்கள் இல்லையா அல்லது வேறு பின்புலமா என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஆனால் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான வித்வான்கள் யாருக்கும் இந்த ஆண்டு டிசம்பர் இசை விழாவில் நிகழ்ச்சி நடுத்த வாய்ப்பு கிடையாது என்று மியூசிக் அகாடெமி அறிவித்து விட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிப்பது என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக மியூசிக் அகாடெமியின் தலைவர் என்.முரளி அறிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலர் தாங்கள் அப்பாவிகள் என்று கூறலாம். அதற்குள்ளாக நாங்கள் செல்லவில்லை. ஆனால் யாருக்கு நிகழ்ச்சிகள் அளிப்பது என்பது எங்கள் உரிமை. கறை படிந்தவர்களை விலக்கி வைப்பது என்று முடிவெடுத்துள்ளோம் என்றும் அவர் கூறி உள்ளார்.

பிரபலமான வித்வான் என அறியப்பட்ட ஓ.எஸ்.தியாகராஜன், மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி விருது பெற்ற சித்ரவீணை ரவி கிரண் என்று பலருக்கு மியூசிக் அகாடெமி வாய்ப்பு தரப்போவதில்லை.

மற்ற சபாக்களும் இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்தால் அது மற்றவர்க்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும்.

தாமதமானாலும் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி பல முகத்திரைகளை கிழித்தெறியும்

#Metoo தொடரட்டும் !!!




8 comments:

  1. பலே, பலே, பேஷ் பேஷ்

    ReplyDelete
  2. இன்னா காம்ரேட், ஒங்களுக்கு விசயம் புரியலயா! இல்ல, புரியாதமாதிரி நடிக்கிறீர்களா! உதாரணத்துக்கு ஒரு அழகான சங்கி-மங்கி சகோதரி உங்கள்மேல் பாலியல் குற்றச்சாட்டு சொன்னால் அதை மவுனமாக எற்றுக்கொண்டு LIC சங்க பணியிலிருந்து விலகிவிடுவீர்களா. (LIC ஊழியர் பணியிலிருந்து விலகி விடுமாறு கோருவது அராஜகம்!).

    என்னோட LIC policy claimல பிரச்சனை இருந்தது அதை clear பண்ணுவதற்காக LIC ஊழியர் சங்கத்தலைவர், வேலூர் 'ராமனை' சந்திக்க சொன்னார்கள். அவர் அவசரமாக சங்க meetingகு கொல்கட்டா செலல விருப்பதாகவும் அங்கு வந்து சந்தித்தால் 'வேலையை' நல்லபடியாக முடித்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தார். ஆதன்படி அவரை கொல்கட்டா சென்று சந்தித்த பொழுது விக்டோரியா மாளிகை தோட்டத்தில் வைத்து என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று ஒரு பெண் 'சீக்கிரமே' உங்கள் மேல் பாலியல் குற்றம் சாட்டலாம். Be ready, comrade!

    உங்களுக்கு வருவது ரத்தமா! அல்லது தக்காளி சட்னியா!! என அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தோழன்

    ReplyDelete
    Replies
    1. உன் பதிலில் இருந்து நான் புரிந்து கொள்ளும் உண்மைகள்.

      நீ ஒரு காலத்தில் பொம்பளை பொறுக்கியாக இருந்து உன் மீது
      #Metoo வருமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பவன்.

      நான் தொழிற்சங்கப் பொறுப்பில் இருப்பதால் எரிச்சலோடு இருப்பவன்.

      என்ன மோசடி வேலை செய்தாலும் இவனை அசைக்க முடியவில்லையே என்ற வெறுப்பை இப்படி பின்னூட்டம் போட்டு சுய திருப்தி அடைந்து கொள்ளும் அயோக்கியன்.

      அப்படி பிரச்சினை வரட்டும். வந்தால் எதிர் கொள்ள தயாராகவே உள்ளேன்.

      என்னை மடக்குவதாக நினைத்து உன்னுடைய பதட்டத்தை வெளிப்படுத்தி விட்டாய்.

      உன்னுடைய பொறுக்கித்தனங்கள் தெரிந்தாலும் உன் அளவிற்கு கீழிறங்க மாட்டேன். அதனால் பிழைத்துப் போ நாயே

      Delete
    2. Why respond to cheap fellows?
      These dogs can only bark

      Delete
    3. ஆணாதிக்க சிந்தனையோடு உங்கள் மீதான வெறுப்பும் சேர்ந்துள்ளது. இது போன்ற சில்லறைப் பேர்வழிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்

      Delete
    4. இந்த பின்னூட்டத்தை எழுதியது யார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. Metoo வில் குற்றச்சாட்டிற்கு உள்ளாக தகுதியுள்ள ஒரு நபர். முகமுடி அணிந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

      Delete
  3. வைரமுத்துமேல 'சித்ராம்மா' புகார்சொன்னா நான் ஏத்துக்குவேன். 'அனுராதா ஸ்ரிராமக்கா' சொன்னா நம்பூவேன். ஆனா செக்ஸ் சாமியார் நித்யா ஆசிரமத்துல உருண்டு புரண்ட சின்மையி சொல்லுரத நம்ப முடியாது! பிராமண சங்க தலைவர் விசயத்திலேயே அவர்களுக்குள் பதவி பூசல் இருப்பது தெரியவருகிறது. பெரும்பாலும் தமிழ் பிராமின் vs தெலுங்கு ப்ராமின் என்பதாக இருக்கலாம். அவனுக எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்னா! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மேய்ப்பொருள் காண்பதறிவுனு வள்ளுவன் சொல்லிக்கிறான்

    ReplyDelete
    Replies
    1. அப்போ எதுக்கு மெனக்கெட்டு இங்க வந்து பதில் சொல்றீங்க?
      எப்பொருள் \மெய்ப்பொருள் எல்லாம் எங்களுக்கும் தெரியும்

      Delete