Friday, October 12, 2018

மணம், சுவை, நிறம் - கேரட் பாதாம் கீர்




இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் போனதில் பால் கையிருப்பு அதிகமாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் வழக்கமாக கேரட் கீரோ அல்லது பாதாம் கீரோ செய்வது வழக்கம்.

அன்றைக்கு என்று பார்த்தால் கேரட்டும் சரி, பாதாமும் சரி போதுமான ஸ்டாக் இல்லை. கடைக்குச் சென்று வாங்கி வரவும் சோம்பேறித்தனமாக இருந்தது.

அதன் விளைவே கேரட் பாதாம் கீர்.

இருந்த கேரட்டை தோல் சீவி சின்ன துண்டங்களாக வெட்டி வேக வைத்துக் கொண்டேன்.

அது போல இருந்த பாதாம் பருப்பையும் சுடு நீரில் ஊற வைத்து பின்பு  தோல் நீக்கிக் கொண்டேன்.

பிறகு வேக வைத்த கேரட் துண்டங்கள், ஊற வைத்த பாதாம் பருப்பு இவற்றோடு சர்க்கரையும் கொஞ்சம் ஏலக்காய் பொடி போட்டு பாலையும் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டேன்.

ஏற்கனவே காய்ச்சி ஆறவைத்து குளிர வைத்த பாலில் இந்த கேரட் பாதாம் விழுதைச் சேர்த்து நன்கு கலந்தேன்.

கேரட் பாதாம் கீர் தயார்.

கேரட்டின் மணம், நிறம் இத்துடன் பாதாமின் ருசியோடு நன்றாகவே இருந்தது.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அது உன் அம்மா, உன் அப்பாவிற்கு செய்தது.
      உன் மனைவி உனக்கு செய்தது.
      உன் மகள் அவள் கணவனுக்கு செய்யப் போவது

      Delete