Tuesday, October 30, 2018

திருட்டுக்கதைக்குத்தான் ஜெமோ இவ்வளவு பில்ட்டப்பா?



விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள "சர்கார்" வருண் ராஜேந்திரன் எழுதிய "செங்கோல்" கதைதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டு முப்பது லட்சம் ரூபாய் பணமும் டைட்டிலில் போடுவதாகவும் ஒப்புக் கொண்டு பஞ்சாயத்தை முடித்து விட்டார். படைப்பாளிக்கு நியாயம் கிடைக்க உதவிய இயக்குனர் பாக்யராஜிற்கு பாராட்டுக்களை பதிவு செய்வது அவசியம்.

ஆனால் இந்த பிரச்சினையில் முருகதாஸிற்கு முட்டு கொடுத்த சர்வலோக இலக்கியவாதி ஜெமோவை எப்படி விட்டு விட முடியும்?

"என்னையும் அரிவாளைத் தூக்க வச்சுட்டீங்களேடா " என்ற ரேஞ்சில்  என்ன பில்ட் அப் கொடுத்தாரு அவரு!

அவருடைய வலைத்தளத்தில் சினிமா பற்றி எழுதக் கூடாது என்ற தவத்தையே கலைத்து விட்டார்கள் என்று தொடங்கிய அந்த கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும். (அவரது வலைத்தளத்தில் சினிமா பற்றியெல்லாம் எழுதத்தான் செய்துள்ளார். இருந்தாலும் ஏதோ முதல் முறையாக எழுதுவது போல ஒரு நடிப்பு)

அந்த கட்டுரையில் ஜெமோ உதிர்த்த முத்துக்கள் இவை . . .

சர்க்கார் படம் நான் பணியாற்றியது. 

பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். 

கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது.

 ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும்.

தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை!” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட  இந்த ஒரே வரிதான் கதை. ‘

ஒரு திருட்டுக் கதைக்கு ஏன் ஜெமோ இவ்வளவு பில்ட் அப்?

நீங்க அரிவாளை தூக்காம இருந்திருந்தா, இப்போ இந்த கேள்வியை கேட்பதற்கான அவசியமே வந்திருக்காது. 

அந்த கட்டுரையை கீழ்க்கண்ட வரிகளை எழுதி முடித்துள்ளார் ஜெமோ. 

என்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.
சாரே, நீங்க நாவலை மட்டும் எழுதுங்க, அது நல்ல நாவலா இல்லையா என்று நாங்க முடிவு செய்து கொள்கிறோம்.

பிகு
முருகதாஸின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின்பு ஜெமோ கொடுத்துள்ள விளக்கம் என்பது விளக்கெண்ணெய்க்கு நிகராக உள்ளது. 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. பார்ப்பன அடிமை நரி இப்போது அசிங்கப்பட்டு இருக்கின்றது

    ReplyDelete