Saturday, October 6, 2018

மய்யம் வலமாயிடுச்சுடோய்




நான் இடதுசாரியும் கிடையாது, வலதுசாரியும் கிடையாது. மையம், அதனால்தான் என் கட்சியின் பெயர் மய்யம் என்று சொன்னவர் கமலஹாசன்.

தமிழகத்தின் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்று சொன்னதன் மூலம்

நான் மய்யம் அல்ல, வலதுசாரி என்று உரக்கக் கூறியுள்ளார் கமலஹாசன்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்குமே மிகப் பெரிய சிறப்பு என்பது அதன் பன்முகத் தன்மைதான்.

அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து

ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்று ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் பாஜகவின் முக்கியமான அஜெண்டாவே.

இந்த அடிப்படை உண்மை கூட கமலஹாசனுக்கு தெரியாது என்றால் அவர் அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்றுதான் சொல்ல முடியும்.

ஒருவேளை தெரிந்திருந்தும் இவ்வாறு கூறியிருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான முடிவை எடுத்து விட்டு பின்னாளில் அதை நியாயப்படுத்துவதற்கான நாடகத்தை துவக்கியுள்ளார் என்றுதான் சொல்ல முடியும்.

அப்படியென்றால் அவரை வலதுசாரி என்றழைக்காமல் வேறெப்படி சொல்வது?




3 comments:

  1. காங்கிரஸ் கட்சி இடதுசாரியாக தோழர்? கமல் சினிமா வியாபாரி. Highly technical and professional. இப்போது அவர் அரசியல் வியாபாரி. பா ஜ க மற்றும் காங்கிரஸ் இரண்டுமே ஒரே சிந்தனை உடையவையாகத்தான் நான் பார்க்கிறேன். பாஜக உண்மையாக நடந்து கொள்கிறது. காங்கிரஸ் நடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தோழரே, இது கமல் முன்பு சொன்னதற்கும் இப்போது சொல்வது பற்றிய பதிவு. காங்கிரஸ் கட்சி பற்றிய விமர்சனங்கள் குறித்து என்னிடத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் பாஜக, அதிலும் மோடி மிகவும் மோசம். கமலஹாசன் வியாபாரி என்பது உண்மையே. இப்பதிவு சுட்டிக்காட்டுவதும் அதைத்தான்

      Delete
  2. அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்றால் முளைக்கும் என நம்புவதோ?.

    இன்றைய நிலையில் மூன்றாவதாக அணி திரள வேண்டியவர்கள் அமைதியாக இருந்துவிட்டு அவசர உப்புமா போல ஓரணி சேர்வது பார்த்து பழகி விட்டது மக்களுக்கு...

    ReplyDelete