தமிழிசை சௌண்டரராஜனின் (எழுத்துப் பிழை ஏதுமில்லை) அவர்களின் சீரிய முயற்சியால் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அண்ணன் மோடிக்கு ஒரு ஆறுதல் பரிசாக தென் கொரிய அரசு அவருக்கு "சியோல் அமைதிப் பரிசு" தரப் போவதாக அறிவித்தது.
தென் ஆசியப் பகுதியில் அமைதியை நிலை நாட்டியதற்காகவும்
மோடினாமிக்ஸ் என்று அழைக்கப்படுகிற மோடியின் அதிரடிப் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழித்து விட்டதற்காகவும் இந்தியாவில் ஏழை பணக்காரன் இடையிலான இடைவெளியை குறைத்து விட்டதற்காகவும்
மோடிக்கு இந்த விருதை வழங்கப் போவதாகவும் அதை பெற்றுக் கொள்ள அவரும் பெருந்தன்மையோடு (இதை எழுதும் போதே சின்னத்தம்பி படத்தில் வரும் ஒரு கவுண்டமணி நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்து விட்டதால் அக்காட்சியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன். பார்த்து சிரிக்கவும்) ஒப்புக்கொண்டுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்தது.
ஆனால் தென் கொரியாவில் செயல்படும் இருபத்தி ஆறு மனித உரிமை அமைப்புக்கள் மோடிக்கு விருது வழங்குவதை கடுமையாகக் கண்டித்துள்ளன.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கலவரத்தில் கொல்லப்பட காரணமாக இருந்தவர் மோடி. அவருக்கு அமைதி விருது கொடுப்பது கொஞ்சம் கூட பொருத்தமற்ற செயல்.
ஏதாவது காரணம் சொல்லி போர் தொடுக்க முடியுமா என்று தெற்கு ஆசியப் பகுதியை பதட்டத்திலேயே வைத்துள்ளார் மோடி.
மோடினாமிக்ஸ் என்பது மிகப் பெரிய தோல்வி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அது உருவாக்கிய பாதிப்புக்கள்தான் அதிகம்.
ஏழை பணக்காரன் மத்தியிலான இடைவெளி குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. இந்திய மக்கட்தொகையில் ஒரு சதவிகிதம் உள்ளவர்களிடம் இந்திய செல்வத்தில் 58 % உள்ளது, அவர்களின் செல்வம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 73 % உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்போம் அறிக்கை சொல்கிறது.
ஆகவே மோடிக்கு விருது கொடுப்பதென்பது சியோல் அமைதி விருதையும் இதற்கு முன்பு அந்த விருதைப் பெற்றவர்களையும் இழிவு படுத்துவதாகும்.
எனவே மோடிக்கு சியோல் அமைதி விருது அளிக்கக் கூடாது.
அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
ஆகவே, வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மோடி சியோல் அமைதிப் பரிசு எனக்கு வேண்டாம் என்று அறிவிப்பார் என எதிர்பார்ப்போம்.
அதெல்லாம் என்னிக்கு அந்த ஆளுக்கு இருந்திருக்கு.
ReplyDeleteநிச்சயமா அந்த விருதை வாங்குவாரு.
மோடிக்கு விருந்து கொடுக்க ஒத்துப்பாங்களா?
ReplyDeleteயாருங்க நீங்க?
Deleteவிருது, விருந்து - வார்த்தை விளையாட்டா?
India Hitler modikku Nobel prize aaa ?
ReplyDeleteகொலைகாரன் மாவோவுக்கு கொடுப்போமா ?
ReplyDeleteமோடிக்கே கொடுக்கும் போது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்
Delete