Friday, October 26, 2018

என்னய்யா கவர்னரு நீ ?




உன்னை எதுக்கய்யா காஷ்மீருக்கு அனுப்பிச்சோம்?

காஷ்மீரில அரசாங்கம் இல்லை. ஆனா சட்டசபையை கலைக்கலை. மெஹபூபா கட்சியிலிருந்து பத்து எம்.எல்.ஏ, ஓமர் அப்துல்லா கட்சியிலிருந்து பத்து எம்.எல்.ஏ, காங்கிரஸை உடைச்சு ஐந்து எ.எல்.ஏ, எல்லாரையும் பாஜகவுல சேர்த்து அங்கே பாஜக அரசாங்கத்தை உருவாக்கனுங்கறதுதானே உன் வேலை?

ஆனா நீ என்ன செய்யற?

அனில் அம்பானியோட இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கொடுத்த அரசு ஊழியர் மெடிக்ளெய்ம் பாலிசியில ஊழல்னு சொல்லி அந்த திட்டத்தையே ரத்து செஞ்சுட்ட.

அம்பானின்னாலே அதுல விவகாரம் இருக்கும். அதை கண்டுக்காம போயிடனும்னு கூட தெரியாத அளவுக்கு நீ என்ன பச்சைக்குழுந்தையா?  நாங்க போட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பார்த்தாவது அம்பானி கிட்ட எப்படி நடந்துக்கனும்னு புரிஞ்சுக்கிட வேண்டாம்!

ஆமாய்யா, அம்பானின்னாலே ஊழல்தான். அவங்க வேற, நாம வேறய்யா! எல்லாமே ஒன்னுக்குள்ள ஒன்னுதானய்யா!

நீயா பிரிமியம் கட்டப் போற? இளிச்சவாய் அரசு ஊழியந்தானே? உனக்கென்ன கெட்டு போச்சி?

ஸ்டேட் பேங்கில இருந்த போது கடன் கொடுத்துட்டு அப்பறம் அம்பானி கிட்டயே வேலைக்கு சேந்தாங்களே அருந்ததி அம்மையார், அவங்களை பாத்து பிழைக்கக் கத்துக்க! நீ மட்டும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உன்னை அனில் அம்பானி அப்படியே குளிப்பாட்டியிருப்பான். அதை விட்டுட்டு ஊழல், ஹைகோர்ட்டு அப்படியெல்லாம் பேசியிருக்க.

இந்த மாதிரி அதிகப்பிரசங்கி வேலையெல்லாம் செய்யாம, ஒழுங்கா கட்சிகளை உடைச்சு நம்ம அரசாங்கத்தை உருவாக்கப் பாரு. தேர்தல் நடத்தனும், அது இது அப்படியெல்லாம் கடிதம் எழுதப்படாது, மக்கள் கிட்ட போய் நீயா ஓட்டு கேக்கப் போற! நாங்கதான்யா மாரடிக்கனும்.

எப்படி கவர்னரா பொறுப்பா இருக்கனும்னு பன்வாரிலால் புரோஹித் கிட்ட கத்துக்க! எவ்வளவு ஜாலியா இருக்காரு பாரு!

நமக்கு பிடிக்காத கட்சி ஆட்சியில இருந்தா அவங்களை எப்படி டார்ச்சர் செய்யனும்னு கிரண் பேடியைப் பார்த்து தெரிஞ்சுக்க!

பிகு

ஜம்முகாஷ்மீர் அரசு ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. முறைகேடுகள் ஏராளம் என்று சொல்லி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அம்மாநில ஆளுனர் சத்யபால் மாலிக்கிடம் மோடி எப்படி பேசியிருப்பார் என்று யோசித்தேன்.

இதைத்தவிர வேறெப்படி மோடியால் பேச முடியும்!

1 comment:

  1. Thank you for expressing exactly modi's words.modi mind voice ketturucha?

    ReplyDelete