Tuesday, October 9, 2018

பட்டுக்கோட்டையாரின் சூடான பதில்




நேற்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பலர் அவர் பாடல் வரிகளை பகிர்ந்து கொண்டனர். பட்டுக்கோட்டையார் என்றால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அவரது திரை வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்தான்.

பட்டுக்கோட்டையார் எழுதிய ஒரு திரைப்படப் பாடலுக்கான ஊதியம் வரவில்லை. அதை வாங்க அந்த தயாரிப்பாளர் வீட்டிற்குச் செல்கிறார். அவரைப் பார்த்து அந்த தயாரிப்பாளர் மிகவும் அலட்சியமாக

“இங்கேயே நிற்கிறதுன்னா நில்லு. ஆனா காசு இப்போ வராது”

என்று சொல்ல

பட்டுக்கோட்டையார் கோபமாகி ஒரு தாளை எடுத்து ஐந்து வரிகள் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்.

அதைப் படித்த தயாரிப்பாளர் உடனே பணத்தை பட்டுக்கோட்டையார் வீட்டுக்கே கொடுத்தனுப்பி விட்டார்.

அனலைக் கக்கிய அப்பாடல்

தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்.
நாயே உன்னை நேற்று
நடுத்தெருவில் சந்தித்தேன்.
நீ யார் என்னை நிற்கச் சொல்ல?

சுயமரியாதை என்பது இதுவன்றி வேறெது?

1 comment:

  1. பட்டுக்கோட்டையார் பட்டுக்கோட்டையார்தான்
    பட்டுக்கோட்டையாரின் சுயமரியாதை போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete