மோடி
அரசு இன்னொரு முறை தமிழர்களிடத்தில் அசிங்கப்பட்டுள்ளது.
Statue of Unity என்ற பெயரில் திறக்கப்பட்ட படேல் சிலைக்கு
தமிழில் “ஸ்டேட்டுக்கே ஓப்பி
யூனிட்டி” என்ற வினோதமான பெயரை அளித்துள்ளார்கள்.
இப்போது
அதை அழிக்கவும் செய்துள்ளார்கள்.
யார்
இந்த மொழிபெயர்ப்பை செய்திருப்பார்கள்?
என்
சந்தேகம் என்னவோ MICRO IRRIGATION என்பதை சொட்டு நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர்
பாசனம் என்று மொழிபெயர்த்த எச்.ராசா மீதுதான்.
பிகு
: நமக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. மற்ற மொழிகளில் என்ன கோளாறுகள் இருக்கிறதோ?
மொத்தம்
பத்து மொழிகள் அங்கே உள்ளது. ஃப்ரெஞ்ச் மொழி போல ஒன்று உள்ளது. சீன மொழியோ ஜப்பான் மொழியோ ஏதோ ஒன்று உள்ளது. ஒரு
மொழி அரபியா இல்லை உருதா என்று எனக்கு தெரியவில்லை.
இதிலே
தெலுங்கு உள்ளதா என்று எங்கள் பிரிவு அதிகாரியிடம் கேட்டேன். அவர் தெலுங்கும் கிடையாது,
கன்னடமும் கிடையாது என்றார். மலையாளம் இல்லை என்பதும் தெரிகிறது
கடைசியாக
உள்ளது பெங்காலி மொழி என்றும் அது சரியாக உள்ளது என்று ஒரு மேற்கு வங்கத் தோழருக்கு
அனுப்பிய போது அவர் கூறினார். ஒரிய மொழி விடுபட்டுள்ளது
என்றும் அவர் கூறினார்.
ஒற்றுமையின்
சிலை என்று பெயர் வைத்து விட்டு இப்படி பல மொழிகளை கண்டு கொள்ளாமல் விட்டவர்களா ஒற்றுமையை
வளர்க்கப் போகிறார்கள்?????
பிகு
2
தமிழுக்கு
முக்கியத்துவம் கொடுத்த மோடியை பாராட்டாமல் விமர்சனம் செய்வது தமிழ்த் துரோகம் என்று
ஒரு கோஷ்டி கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலை
ReplyDeleteராஜலட்சுமி கொலை பற்றி எழுதியிருக்க வேண்டும். விரிவாக எழுத நினைத்து முடியாமல் போனது. விமர்சனத்தை ஏற்கிறேன்.
Deleteஆனால் இதை அனாமதேயமாக எழுதுவது உறுத்தலாக உள்ளது. யார் என்று சொல்லவும். இல்லையென்றால் வன்மம் யாருக்கு என்பது தெரிந்து போய் விடும்
கேட்டவர் அனானியாக இருக்கலாம்
Deleteஆனால் கேட்ட்து தப்பே இல்லை தானே
எல்லாவற்றுக்கும் பொங்கும் நீங்கள் இங்கே மௌனமாக இருப்பதன் ரகசியம் என்ன ?
( அந்த அனானி நான் அல்ல )
நான் எழுதிய பின்னூட்டத்தை மீண்டும் படிக்கவும்
Deleteராமன் சார்
Deleteஉங்களை அக்கினி பிரவேசம் செய்ய சொல்லும் திமுக ஆபாச போர்வாள் அன்சாரி அவர் தலைவர் சுடாலின் கள்ள மவுனமாக இருப்பதன் ரகசியம் என்ன வென்று கேட்டு சொல்லட்டும்
சுடாலினுக்கு ஜாதி வெறியர் முத்து ராமலிங்கத்துக்கு மாலை போடவே நேரம் பத்தாது
ஒரு தகவல்
திமுகவில் 2 ஆபாச போர்வாள்கள் உண்டு
அன்சாரி அடுத்து அபு ரயான்
Russian language also fault. Directly written as statue of unity in Russian
ReplyDelete