Wednesday, October 17, 2018

அந்த பசங்களோட வளர்ப்பு அப்படி


மேலே உள்ள படத்தை(ஒரு சிறிய மாற்றத்தை நான் செய்தேன்) பல தோழர்கள் கோபத்தோடு நேற்று முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (SFI) போராடி பெற்ற் ஒரு முன்னேற்றத்தை தங்களுடைய வெற்றி என்று காவி மாணவர் அமைப்பான ஏபிவிபி என சுவரொட்டி அடித்ததை கண்டிக்கும் படம் அது.

அந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் காவல்துறையிடம் தடியடி பெற்றார்கள், கைதானார்கள். ஏ.பி.வி.பி வழக்கம் போல ஒய்யாரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் தங்களின் வெற்றி என்று வெட்கம் இல்லாமல் சுவரொட்டியும் அடித்தது.

ஆனால் இதிலே வியப்பதற்கோ அதிர்ச்சியாவதற்கோ எதுவும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏ.பி.வி.பி. அவர்களால் வளர்க்கப்படும் மாணவர்களிடம் காவிக்கூட்டத்திற்கே உரித்தான குணாம்சங்களான பொய், மோசடி, திருட்டுத்தனம், அயோக்கியத்தனம், ரௌடித்தனம் ஆகியவை இல்லாமல்

நேர்மை, நீதி, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையா இருக்கும்?

வாகை சூட வா படத்தில் 

"சுரை விதை போட்டா அவரையா வளரும்?" 

என்று தம்பி ராமையா கூறுவார்.



அது போல

இப்படி மோசடித்தனம் செய்வதுதான்
ஏ.பி.வி.பி அமைப்பின் வழக்கம்.
அவர்களின் வளர்ப்பு அப்படி . . .

2 comments:

  1. சார் , உங்கள நெனைச்சாலே எனக்கு பொறாமையாக இருக்கு சார்
    ஒரு போஸ்ட் படிக்குறதுக்கே பயந்து பயந்து படிக்க வேண்டி இருக்கு
    ஆனால் நீங்க தெனமும் 2 போஸ்ட் போடுறீங்க
    ஒன்னு நீங்க பாஸாக இருக்கணும்
    இல்ல ஒங்க பாஸ் சொக்க தங்கமாக இருக்கணும்

    ReplyDelete
  2. மன்னிக்கவும் நான் பாஸ் அல்ல. எந்த பதிவும் அலுவலக நேரத்தில் எழுதுவதும் அல்ல. ஒரு பதிவு எழுத எனக்கு தேவைப்படும் நேரம் இருபது நிமிடங்கள் மட்டுமே. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் தேவையே கிடையாது

    ReplyDelete