Sunday, October 14, 2018

#Metoo - குறுகிய பார்வை வேண்டாமே . . .



#Metoo  

அமைப்புரீதியானதொரு இயக்கமல்ல.
என்றோ ஒரு நாள் அமைதியாக கடந்த ஒரு வலியை இன்று சிலர் நினைவு கூர்கின்றனர்.

அன்றைக்கு அதைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கலாம் . . .
அச்சம் இருந்திருக்கலாம் . . .
சமூகம் கடித்துக் குதறினால் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் இருந்திருக்கலாம் . . .

அன்று நடந்ததை இன்று ஒருவர் சொல்ல,
நானும் கூட பாதிக்கப்பட்டேன் 
என்று வேறு சிலரும்
கடந்த கால கசப்பை நினைவு கொள்ள,
பலரும் தங்கள் வேதனைகளை பகிர்ந்து கொள்ள . . .

இன்று என்ன நடக்கிறது?

அன்று ஏன் சும்மா இருந்தாய்?
இன்று ஏன் பேசுகிறாய்?

கேள்விக்கணைகள் தொடுக்கலாம் . . .
ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளையே அறிவிக்கிறார்கள் . . .

ஏராளமான நையாண்டிகள் . . .

மூன்றாவது படிக்கையில் ஜடையை இழுத்ததற்காக இன்று கைது . . .

இத்யாதி இத்யாதி . . .

பிரச்சினைகளை திசை திருப்பும் உத்திகள் என்றும் பலர் சொல்கின்றார்கள். யார் அவர்கள் என்று தேடிப்பார்த்தால் அவர்கள் சொல்லும் பிரச்சினைகள் குறித்தெல்லாம் எந்த காலத்திலும் எந்த வித சிறு கவலையும் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். 

அந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், தங்கள் கவனத்தை திசை திருப்பிக் கொள்ளவில்லை, #Metoo என்பவர்களோடும் இணைந்து நிற்கிறார்கள்.


பின் ஏன்?

குற்றம் சுமத்துபவர் பிடிக்காதவர் என்பதாலும் 
குற்றம் சுமத்தப்படுபவர் பிடித்தவர் என்பதாலுமா?

இப்பிரச்சினை ஒன்றும் வைரமுத்து-சின்மயி என்ற இருவரோடு சுருங்கிப் போன பிரச்சினையல்லவே! இருவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது என்று முன்பு சொன்னதை நினைவு படுத்துகிறேன். ஆனால் இந்த இருவர் மட்டுமல்ல சர்ச்சை. 

நேற்றைக்கு  நானா படேகர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு எம்.ஜே.அக்பர் பதவி விலகியிருக்கிறார்.
நாளை முகத்திரை கிழிந்த வேறு யாராவது ஒளிவட்டம் இழக்கலாம். 

முந்தைய பதிவில் சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறேன்.

திருவள்ளுவர் சொன்னதுதான்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாது
நாவினால் சுட்ட வடு.

என்றோ நடந்ததுதான். அன்று சொல்லாததுதான். ஆனால் இன்று அதைச் சொல்லும் தைரியம் சிலருக்கு வந்ததால் நாமும் சொல்லலாம் என்று பலருக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் அறிமுகமே இல்லாத முறைசாராப் பெண்களுக்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது.

என்றோ நடந்ததைக் கூட சொல்கிறார்களே என்று சிலருக்கு அச்சம் வருகிறது என்பதைக் கூட உணர முடிகிறது. #Hetoo என்று கை காண்பித்து விடுவார்களோ என்ற நடுக்கமாகக் கூட அது இருக்கலாம்.

அன்று நடந்த கசப்பை இன்று சொல்பவர்கள் மீது கசப்பைக் காண்பிக்காதீர்கள். 

தங்களை சீண்டுபவர்களை அம்பலப்படுத்தலாம் என்று புதிய நம்பிக்கை அளிப்பவர்கள் அவர்கள். ஆம் அவர்களின் கசப்பான அனுபவமும் இன்றைய தைரியமும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் உறுதியைத் தரும்.

நாம் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் இனியும் பொறுமையாய் கடந்து போக மாட்டார்கள் என்ற அச்சம் கோயில் காளைகளாய் திரியும் சில ஆண்களுக்கும் உருவாகும். 

இது சமூகத்திற்கு நல்லது.
பாலின சமத்துவத்திற்கும் நல்லது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலை மீண்டும் ஒடுக்காதீர்கள் . . .

10 comments:

  1. Superb Com.Raman! Read a similar post of vasugi baskar today.

    ReplyDelete
  2. well done. very nice

    ReplyDelete
  3. I totally agree, even if there is possibility of few accusations false , being I support and believe all women.

    ReplyDelete
  4. பெண்கள் துணிச்சலாக வெளியே வந்தது வரவேற்க தக்கதே. அதே நேரம் இதையே சாக்காக வைத்து தனக்கு பிடிக்கதவர்களை பழிவாங்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம் எப்படி தவறாக பயன்படுத்தபடுகிறதோ அதே போல இதுவும் மாறி விட கூடாது. அதனால் எதை ஆதரிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
    சின்மயி சொல்வதில் உண்மையிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர் நடந்து கொள்ளும் விதம் என்னவோ தனக்கு நடந்த அவமானத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை விட வைரமுத்துவை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டும் என்ற வெறியும் ஆணவமும் தான் அதிகமாக தெரிகிறது.

    ReplyDelete
  5. ///இது சமூகத்திற்கு நல்லது.
    பாலின சமத்துவத்திற்கும் நல்லது.///

    எது சமத்துவம்....?

    ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக பழகவிட்டு வேலையும் செய்யவிட்டு அதனால் பாலியல் தொந்தரவுகள் உட்பட இன்னும் பல அனைத்து மானக்கேடான சம்பவங்களும் நடைபெற‌ நாமே எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டு அதிலிருந்து தற்காத்துகொள்ள எந்த தீர்வும் தெரியாமல் தடுமாறி நிற்பதற்கு பேரா சமத்துவம்.

    #metoo என்ன சொல்கிறது....!?

    அதில் பதிவு செய்திருக்கும் பெண்கள் அனைவரும்... கூட வேலை செய்யும் ஆண்களின் அல்லது தனக்கு மேல் அதிகாரம் படைத்த ஆண்களின்... பாலியல் தொல்லைகளை தானே வெளிப்படித்தி இருக்கிறார்கள்.

    ஏன் இந்த அவலம்...?

    ஆண் என்றும் அவன் ஆண் தான். ஒருவன் சமூகத்தில் எவ்வளவு தான் உயரிய நிலையை அடைந்தாலும் தன்னை எவ்வளவு தான் மேலான நாகரீகமானவனாக காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் அவன் ஒரு ஆண்.

    வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு எதன் பொருட்டோ ஒரு ஆண் ஒரு பெண் கூட‌ தனிமையில் இருக்கும் சந்தர்பம் ஏற்படின் அவன் தவறு செய்யவே முற்படுவான். அது அவனின் இயல்பு. இந்த தனிமை... பலவிதங்களில் ஆண்களால் அதிகாரம் படைத்த ஆண்களால் ஏற்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம்.

    இதிலிருந்து பெண்களை எப்படி காப்பது. சமத்துவம் கொடுக்கும் ஒரு மிகப்பெரிய விலை இல்லையா...இது...?

    என்ன செய்யலாம்...?

    பெண்கள் வேலைக்கு செல்லாது இருக்கலாமா...? என்று கேட்டால்... அப்படி செய்து தான் பார்ப்போமே.

    அப்படி செய்தால் எல்லா ஆண்களுக்கும் வேலை கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்.

    பெண்கள் வீட்டை, குடும்பத்தை நிர்வகித்து கொண்டு பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்க நெறிகள் போதித்து வளர்க்க முழு நேரத்தையும் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    மேலும், அவர்களுக்கு வேலைச்சுமை, மன உளைச்சல் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.

    இப்படி இருக்கும் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். இப்படி எல்லா குடும்பமும் இருந்தால் நாடு நலம் பெறும்.

    இப்படியான குடும்பங்களில் இருந்து வளர்ந்து வரும் மக்களை கொண்ட நாடு எவ்வளவு சுபிட்சமான நாடாக இருக்கும்.

    சமத்துவத்திற்கு எதிரானவன் அல்ல நான். ஆனால், ஆண் பெண் சமத்துவம் இதில் இல்லை என்கிறேன்.

    அது எவ்வளவு ஆபத்து என்று #metoo சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது,
      ஆண்களையே நம்பி இருக்க வேண்டும்
      என்ற
      பிற்போக்குக் கருத்தை
      எப்படியெல்லாம் ஒளித்து ஒளித்து
      எழுதியுள்ளீர்கள்!
      குடும்பத்துக்குள்தான் பெண்களுக்கு மிகப் பெரிய
      அச்சுறுத்தல் உள்ளது என்பதை அறிவீரோ?

      Delete
    2. நான் எங்கே ஒளித்து எழுதியுள்ளேன்.

      ///பெண்கள் வேலைக்கு செல்லாது இருக்கலாமா...? என்று கேட்டால்... அப்படி செய்து தான் பார்ப்போமே///

      என்று இந்த பத்தியை தெளிவாக தானே எழுதியுள்ளேன்.

      வீட்டிலும் கயவர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்களா...?

      அவர்கள் அண்ணனோ தம்பியோ இல்லை தந்தையோ என்கிறீர்களா...?

      அல்லது வேறு யாராக இருக்கும்...!

      மேலே குறிப்பிட்ட உறவு முறை அல்லாது வேறு யாராக இருந்தாலும் விழிப்போடு இருந்து பெண்கள் 'அந்த வேறு யாரோ' அவனிடம் தனிமையாக இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்.

      வேலை என்று போனால் பாதுகாப்பு இருக்கா...?

      இல்லை என்பதை தானே #metoo சொல்கிறது.

      பிற்போக்கான கருத்தாகவே இருந்துவிட்டு போகட்டும்.

      மானம் பறிபோகிறதே ஐயா...அதற்கு என்ன வழி...!?




      Delete
    3. நான் எங்கே ஒளித்து எழுதியுள்ளேன்.

      ///பெண்கள் வேலைக்கு செல்லாது இருக்கலாமா...? என்று கேட்டால்... அப்படி செய்து தான் பார்ப்போமே.///

      என்று இந்த பத்தியை நான் தெளிவாக தானே எழுதியுள்ளேன்.

      வீட்டிலும் கயவர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்களா...?

      அவர்கள் அண்ணனோ தம்பியோ இல்லை தந்தையோ என்கிறீர்களா...?

      அல்ல மேலே குறிப்பிட்ட உறவு முறை அல்லாது வேறு யாரோ என்கிறீர்களா...?

      விழிப்புணர்வுடன் இருந்தால்... 'அந்த வேறு யாரோ' ஒரு கயவனிடம் பெண்கள் தனிமையாக இல்லாதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும்.

      பெண்கள் வேலைக்கு என்று சென்று விட்டால் இந்த பாதுகாப்பு அரணை ஏற்படுத்த முடியுமா...? அதற்கு என்ன தீர்வு.

      நான் சொன்னது பிற்போக்காகவே இருக்கட்டும்.

      ஆனால் வேலை என்று போகும் போது மானமும் சேர்ந்தே போகிறதே ஐயா. இதை தானே #metoo சொல்கிறது.

      இதற்கு என்ன தீர்வு...?

      Delete
    4. நான் எங்கே ஒளித்து எழுதினேன்.

      ///பெண்கள் வேலைக்கு செல்லாது இருக்கலாமா...? என்று கேட்டால்... அப்படி செய்து தான் பார்ப்போமே.///

      என்று தெளிவாத்தானே எழுதினேன்.

      குடும்பத்துக்குள் அச்சுறுத்தலா...!?

      யாரை சொல்கிறீர்கள். அண்ணன், தம்பிகளையா இல்லை தந்தைமார்களையா...? இருக்காது என்று நம்புகிறேன்.

      அல்ல இவர்கள் அல்லாது வேறு உறவு முறையா...? அப்படி யாராவது இருந்தால்...சுலபமாக அவர்களிடம் இருந்து பெண்களை காத்துவிடலாமே. அந்த கயவர்களிடம் ஒரு பெண் தனித்து இருக்கும் சூழலை விழிப்போடு இருந்து தற்காது கொண்டாலே போதுமே. அல்லது அவன் குணமறிந்து அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாலும் நீங்கள் அந்த அச்சுறுத்தலிருந்து காத்துவிடலாமே.

      ஆனால், வேலைக்கு என்று வீடு கிளம்பி செல்லும் பெண்களுக்கு தனிமையை உருவாக்கி பாலியல் குற்றம் புரியும் அயோக்கியர்களிட‌மிருந்து பெண்களை பாதுகாக்க என்ன தீர்வை வைத்துள்ளீர்கள்.

      நான் சொல்வது பிற்போக்காகவே இருக்கட்டும்.

      ஆனால் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மானம் பறி போகுதே ஐயா. அதை தானே #metoo சொல்கிறது.

      இதற்கு என்ன தீர்வு...?

      Delete
    5. 'மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது" என்பார்களே, நீங்கள் சொல்லும் ஆலோசனை அதுதான். NCRB என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு உள்ளது. குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடும். பெண்கள் சந்திக்கும் பாலியல் குற்றங்களில் பெரும்பாலானவற்றை நிகழ்த்துவது உறவினர்கள் என்பதுதான் அந்த துயரமான உண்மை. நீங்க யாருன்னு தெரியலை. ஆனா கொஞ்சம் உலகைப் படியுங்கள்.

      வேலை பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு - விசாகா தீர்ப்பைப் படியுங்கள்.

      பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த நீதியரசர் வர்மா குழு பல முக்கிய பரிந்துரைகள் அளித்துள்ளது. அதையும் படியுங்கள்.

      வேலை என்பதுதான் பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு. அதை பறிக்க நினைப்பது பிற்போக்குத்தனமானதுதான்

      Delete