Thursday, October 25, 2018

மோடியின் பிண அரசியல்




ஸ்டெரிலைட்டில் வேதாந்தா-மோடி-எடப்பாடி கூட்டுக் களவாணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்களை பலி கொண்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது

நீட் தேர்வின் காரணமாக அனிதா உள்ளிட்டவர்கள் மரணத்தை நாடிய வேளையில் நடைபெற்ற இயக்கங்களின் போது

கம்யூனிஸ்டுகளும் மற்ற அமைப்புக்களும் பிண அரசியல் நடத்துவதாக சங்கிகள் கூச்சல் போட்டார்கள்.

போராட்டத்தின் நியாயத்தை சகிக்க முடியாத காவிக்கயவர்களின் கூக்குரல் அது. உண்மையிலேயே பிண அரசியலை நடத்தியது மோடி என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

2016 டிசம்பரில் உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்த நேரத்தில் ஆஜ்மீர்-சியால்டா விரைவு வண்டி கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகிறது. நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள்.  

கான்பூரில் நிகழ்ந்தது விபத்தல்ல. எல்லைக்கு அப்பால் அமர்ந்துள்ளவர்கள் தீட்டிய சதி என்று மோடி ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ஆவேசமாக பேசுகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எப்படி நவாஸ் ஷெரிபின் தலையை வெட்டி பிரியாணி செய்வேன் என்று ஆவேசமாகப் பேசினாரோ, அதே ஆக்ரோஷத்தோடு கான்பூரில் 150 பேருக்கு மேற்பட்டவர்கள் இறந்து போக அன்னிய நாட்டு சதி என்று முழங்கினார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சதிதான் காரணம் என்றும் அவர்கள் வெடிகுண்டு வைத்ததால்தான் வண்டி தடம் புரண்டது என்று அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் குற்றம் சுமத்துகிறார். தேசிய புலனாய்வு ஆணையம் (என்.ஐ.ஏ) விசாரணைக்கு ஆணையிடப்படுகிறது.

ஆனால் அப்போதே உபி மாநில ரயில்வே போலீஸின் டி.ஜி.பி கோபால் குப்தா என்பவர், அது வெறும் விபத்துதான். தண்டவாளங்கள் வலு இழந்து இருந்ததும், பனிக்காலம் என்பதால் தெளிவாக தண்டவாளத்தை பார்க்க முடியாததும் காரணம் என்று கூறினார். விபத்தில் வெடிகுண்டு பயன்படுத்தல் குறித்த எந்த தடயமும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

விபத்து நடத்த பகுதியை முழுமையாக ஆய்வு செய்த ஐ.ஐ.டி நிபுணர் குழுவும் அங்கே வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது  என்பதற்கு சிறு ஆதாரமும் கிடையாது என்று தெளிவாக அறிக்கை கொடுத்து விட்டது.

இப்போது வந்திருக்கிற  செய்தி என்னவென்றால்

கான்பூர் ரயில் விபத்து, ஒரு சதி வேலை கிடையாது என்ற முடிவுக்கு வந்த தேசிய புலனாய்வு ஆணையம், இவ்விபத்து தொடர்பாக குற்றப் பத்திரிக்கை எதையும் தாக்கல் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

ஆக மொத்தம்

நடந்தது விபத்து, விபத்து, விபத்து மட்டுமே.
ஆனால் மோடி அதை அன்னிய சதி என்று ஒரு பொய்யைப் பரப்பி தேர்தலில் வெற்றி பெற்று மொட்டைச்சாமியாரை முதலமைச்சராகவும் பதவி ஏற்க வைத்து விட்டார்.

சங்கிகளே, புரிந்து கொள்ளுங்கள்.

அநியாயமாக சில உயிர்கள் பறிக்கப்படுகிற போது அதற்கு நியாயம் கேட்டுப் போராடுவதல்ல . . .

மோடி செய்ததுதான் பிண அரசியல்.



1 comment:

  1. மோடி ஒரு பொய்யன்

    ReplyDelete