Monday, October 29, 2018

நிதானமாக இருந்திருக்கலாமே சிவக்குமார்?



அந்த இளைஞன் சூர்யாவின் ரசிகனாக இருக்கலாம், கார்த்தியின் ரசிகனாக இருக்கலாம். ஏன் சிவக்குமாரின் ரசிகனாகவே கூட இருக்கலாம்.

சிவக்குமார் ஒரு முக்கியமான ஆளுமை என்பதால்தான் அவரோடு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான். அதற்காக அவரை தொந்தரவு கூட செய்யவில்லை. தூரத்தில் நின்று கொண்டு ஃப்ரேமில் இருவரும் இருப்பது போல முயற்சி செய்து கொண்டிருந்தான்.

படமெடுப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் "குணமாக" சொல்லியிருக்கலாம். அல்லது கண்டித்துக் கூட சொல்லி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் அது உங்களுக்கும் அவனுக்கும் மட்டுமான விஷயமாக இருந்திருக்கும்.

ஆனால் நீங்களோ "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற பழமொழியை உங்கள் சார்பிலும் ஒரு முறை நிரூபித்து அந்த பையனின் தொலைபேசியை தட்டி விட்டீர்கள்.

அந்த பையனுக்கு அவமானம் எப்போதும் உறுத்திக் கொண்டிருக்குமே! இப்படிப்பட்ட ஒரு நபரோடு போய் படம் எடுத்துக் கொள்ள விரும்பினோமே என்று நினைத்திருப்பான். அது உங்களுக்கல்லவா அவமானம்!

யோகா செய்தால் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஊருக்கு உபதேசம் செய்தவரின் ஒழுங்கைப் பாருங்கள் என்று உங்களின் காணொளி உங்களை உலகெங்கும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் திரு சிவக்குமார் அவர்களே!




8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. வருண் கமெண்ட் ஐ வெளியிட்டு இருக்கலாம்
      செம காமெடியாக இருந்திருக்கும்

      Delete
  2. பலருக்கு வயசான வரும் பிரச்சினை தான்
    இதுக்கு முதல் ஸ்டாலின் 2 தடவை அடித்து உள்ளார்

    ReplyDelete
  3. இப்போ சிவ குமாரை வைச்சு செய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க
    வைரமுத்து great escape

    ReplyDelete
  4. சரியா சொன்னீர்கள்

    ReplyDelete
  5. சிவகுமார் செய்ததில் எந்தத் தப்பும் இல்லை! எதுக்கு மன்னிப்பு?!
    இந்தியாவில் ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வைத்துக் கொண்டு பைத்தியம்போல் அலைகிறார்கள்.

    பிரபலங்கள் வரும்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று அவர்கள் அனுமதி பெறாமல் எடுப்பது தவறுனு இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி எடுத்துச் சொல்லுவது?

    சிவகுமார் போல் செல் ஃபோனை தூக்கி எறிந்தாலாவது தான் செய்வது தப்பு என்று இந்த மரமண்டைகளுக்குப் புரியும்.

    இப்போ மன்னிப்பு கேட்டு எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்.

    ReplyDelete
  6. சிவக்குமார் இப்படி நடந்து கொண்டது வியப்பாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  7. Sivakumar is the only gentleman in the industry. all others are #metoo cases.

    ReplyDelete