Thursday, October 18, 2018

பிராந்தர்களின் தேசமல்ல கேரளம் . . .





காவிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்தான்

“பைத்தியக்காரர்களின் நாடு கேரளம்”

என்று கூறினார்.
பார்த்தால் தீட்டு, பேசினால் தீட்டு, நிழலுக்கும் தீட்டு என்று மிக மோசமான தீண்டாமைக் கொடுமை நிலவும் பகுதியாக கேரளம் திகழ்ந்ததைப் பார்த்து மனம் நொந்து போய் கூறியது அது.

அய்யங்காளி, நாராயணகுரு போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பு, தோழர்கள் இ.எம்.எஸ், ஏ.கே.ஜி ஆகியோரின் தீவிரமான பணி ஆகியவை நிலைமையை மாற்றியது.

தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான முதல் கம்யூனிஸ அரசு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலத்தை பகிர்ந்தளித்து அவர்களை தலை நிமிர வைத்தது.

தொடர்ந்த இடது முன்னணி அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் கேரளத்தை நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமாக மாற்றியது. தீண்டாமைக் கொடுமைகள் கட்டுப்படுத்த மாநிலமாகவும் திகழ்கிறது.

ஒற்றுமைக்கு உதாரணமாகவும் கேரளத்தைத்தான் சொல்ல முடியும். வெள்ள நிவாரணப்பணி ஒன்று போதும் சான்று சொல்ல.

இந்த நிலைமையை சீர்குலைக்க காவிக்கயவர்கள் முயல்கிறார்கள். சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் கலவரத் தீயை மூட்டி குளிர் காய விழைகிறார்கள்.

அன்று பார்த்தால், பேசினால், நிழல் தீண்டினால் தீட்டு என்று நடைமுறைப்படுத்தி  கேரளாவிற்கு “பைத்தியக்காரர்களின் தேசம்” என்று விவேகானந்தரிடம் யார்  பெயர் வாங்கிக் கொடுத்தார்களோ, அவர்களின் வாரிசுகள்தான் இன்று பெண்களை ஒடுக்க ஐயப்பனை ஒரு ஆயுதமாக கையில் எடுக்கிறார்கள்.

ஆனால்

இப்போது கேரளம், பைத்தியக்காரர்களின் தேசம் அல்ல.

அறிவும் அர்ப்பணிப்பும், போராட்ட உணர்வும் கொண்ட தோழர்களின் தேசம்.

அவர்கள் அனைத்து சதிகளையும் முறியடிப்பார்கள்,

கேரளத்தை பாதுகாப்பார்கள். ..

3 comments:

  1. ஆனால் தோழர் நிலைமை அவ்வாறு இல்லை
    நான் டுபாயில் இருக்கின்றேன்
    எனக்கு நூற்றுக்கணக்கில் மலையாளி நண்பர்கள் உள்ளார்கள்
    மலையாளிகள் மலையாள தேசிய வாதம் உள்ளவர்கள்
    அவர்களை பொறுத்தவரை ஓணம், அய்யப்பன் எல்லாம் அவர்களின் அடையாளம் . இந்து அடையாளம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை . மலையாள அடையாளம் முக்கியம்
    ( தமிழர்களுக்கு ஜல்லி கட்டு போல் ... அதுக்கும் மேலே )
    அதனால் தான்
    கம்யூனிச கட் சி கூட அங்கே ஓணம் கொண்டாடுவார்கள் , கிறிஸ்தவர்கள் கூட ஓணம் சர்ச்சில் கொண்டாடுவார்கள்

    அய்யப்பன் மீதான இந்த தடை நீக்கத்தை தங்கள் அடையாளம் , கலாச்சாரம் மீதான தாக்குதலாக பார்க்கின்றார்கள்

    மோடி, பாஜக தேசிய தலைமைகள் எந்த கருத்தும் சொல்லாமல் கம் இருப்பதை பாருங்கள்
    கருத்து சொல்லி மலையாளிகளை திசை திருப்பாம அவர்களையே அடிச்சு சாக விட்டிருக்கின்றார்கள்
    உண்மையில் தீவிர பாஜக எதிர்ப்புணர்வு கொண்ட மலையாள இந்துக்களே இப்போ கொதிச்சு கொண்டிருக்கின்றார்கள்

    இதுதான் பாஜக வின் திருட்டு ஆட்டம்

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது சொன்னால் 'எதிர்ப்பில் குளிர் காய்கிறது' என்பது. இல்லையென்றால், 'கள்ள மௌனம்'. என்ன தான் எதிர்பார்க்கிறீர்கள் பிஜேபி இடம் இருந்து?

      Delete
  2. @bandhu,

    இதெல்லாம் பாஜகவின் நாடகங்களே

    ReplyDelete