Wednesday, October 3, 2018

ஐ.நா சொன்னா மோடி கேட்கனுமா?



காந்தியை மதிக்கவும் முடியலை, காந்தியை புறக்கணிக்கவும் முடியலை. அதனாலே காந்தி ஜெயந்தியை வெறுமனே துடைப்பத்தைத் தூக்கி கிட்டு போஸ் கொடுக்கிற சொச்ச பாரத் நாளாக (இந்தியா முழுதுமே இந்த சொச்ச பாரத் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வெட்டி சீன் நாளாகத்தான் உள்ளது) மாற்றி அந்தாளை அசிங்கப்படுத்த நினைத்தால் இந்த ஐக்கிய நாடுகள் சபை, காந்தி ஜெயந்தியை "சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள்" என்று அறிவித்தால் அது மோடியை கட்டுப்படுத்துமா என்ன?

அதனாலதான் டெல்லிக்கு வந்த விவசாயிகள் பேரணி மீது டெல்லி போலீஸை ஏவி விட்டு கொடுந்தாக்குதல் நடத்தி காந்தி ஜெயந்தியை "அரசு வன்முறை நாள்" என்று மாத்தினாரு.

ஐ.நா என்றால் பெரிய இதுவா? யார் கிட்டே? மோடிடா !





பின் குறிப்பு

டெல்லி போலீஸுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று அப்பாவித்தனமாக கேட்க நினைக்கும் அன்பர்களுக்கு மட்டும் . . 

டெல்லி அரசுக்கும் டெல்லி போலீஸுக்கும்தான் எந்த சம்பந்தமும் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் டெல்லி போலீஸ் உள்ளது.

1 comment:

  1. நம்பிக்கை ராஜ்October 5, 2018 at 12:57 PM

    தனக்கு தானே சாவு மணியடிக்கும் பாஜக

    ReplyDelete