பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கிளப்பிய பொறி அது. அவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்து கொள்ள #Metoo என்று தீ பரவத் தொடங்கியது.
சில பெருச்சாளிகள் தொடங்கி பல திமிங்கிலங்கள் வரை அந்த நெருப்பு வளையத்தில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
நானா படேகர், எம்.ஜே.அக்பர் என்று பல முக்கியப் புள்ளிகளின் முகத்திரை கிழிந்து வருகிறது.
வைரமுத்து தொடங்கி பல கர்னாடக இசை வித்வான்கள் வரை பலரின் கடந்த கால கறைகள் இப்போது பல்லிளிக்கிறது.
சின்மயி வைரமுத்து மீது சொல்லிய குற்றச்சாட்டை திரு சுபவீ நிராகரித்திருக்கலாம். அவதூறு செய்கிறார் என்று வசை பாடி இருக்கலாம்.
ஆனால் பொதுமைப்படுத்தி
தங்கள் வாழ்வின் கசப்பான சம்பவங்களை நினைவு கூறும் பாதிக்கப்பட்ட அத்தனைப் பெண்களையும் இழிவு படுத்தியிருக்க வேண்டாம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டிய பொறுப்பை அவர் பெரியாரிடமிருந்து கற்கவில்லையா?
தாமதமாகத்தான் குற்றச்சாட்டுக்கள் வருகிறது. அதனால் அந்த குற்றங்கள் இல்லையென்று சொல்லி விட முடியுமா?
காலம் கடந்து போயிருக்கலாம். அந்த சூழலில் வெளிப்படையாக சொல்லும் தைரியம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மனதின் காயம் மறையாது அல்லவா? வடு அப்படியேதானே இருக்கும்?
வைரமுத்துவை பாதுகாக்க அவர் தன்னுடைய நற்பெயரை இழப்பது வருத்தமாகவே உள்ளது.
பிகு
வைரமுத்துவின் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. சின்மயி மீதும் கூட. ஒளிவட்டங்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்பதுதான் அவர்களின் கடந்த காலம்
நான் ஒரு திராவிட ஆதரவாளன்
ReplyDeleteவாழ்நாளில் முதல் தடவையாக தலை குனிந்திருக்கின்றேன்
பொதுவுடைமையை பெருமைப்படுத்தி இருக்கின்ரீர்கள்
ReplyDeleteயாராவது கம்யூனிச தலைவர் கேவலமாக பேசி எனக்கு நடந்த அசிங்கம் உங்களுக்கு நடக்க கூடாது
இரண்டு சங்கரச்சாரி மீதும் பெண்கள் புகார் சொன்னார்கள்.அதுவும் அவர்கள ஆட்களே சொன்னார்கள். அவர்கள் செய்தால் எந்த பிரச்னையும் கிடையாது. அப்போது இளையராஜா சொன்னார் எனக்கு சங்கரச்சாரி மீது நம்பிக்கை உள்ளது என்று. அவரவர் வீட்டு பெண்கள் இப்படி பாதிக்கபட்டால் எப்படி மனம் வலிக்கும்.
ReplyDeleteசினிமா துறை ஒழுக்கமனதா என்று கேட்கலாம் ?. ஆன்மிகம் அப்படி இருக்கலாமா?
இன்றைய அரசியல் சூழலில் யாரையும் பழி வாங்கும் போக்கும் உள்ளது. ஆண்டாள் விவகாரம் அவர்கள் மனதை விட்டு போகவில்லை . மேலும் தேர்தல் வருகிறது.எதாவது கிளப்ப வேண்டும். இப்போதே கவர்னர் விவகாரத்தை மூட அவசரம் உள்ளது. எதுவாகவும் இருக்கலாம்.
உண்மை வெளி வந்தால் பரவாயில்லை. குற்றம் எங்கே என்று தெரிய வரலாம்.
This comment has been removed by a blog administrator.
Deleteபல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான். இதுதான் வைரமுத்து
ReplyDeleteகதையும். தைரியமாக இதை வெளி கொண்டுவந்த சின்மயி
பாராட்ட பட வேண்டியவர் . சுபவீ வைரமுத்துக்கு வக்காலத்து
வாங்குவது தவறு, வைரமுத்துவே பூசி மெழுகுகிறார் என்றால்
அவர் தவறு செய்து இருக்கிறார் என்று அர்த்தமாகிறது
ஒரு ஆண்டகை இன்னொரு ஆண்டகைக்கு முட்டு கொடுப்பது திராவிட பண்பாடு
Deleteகவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவின் பாலியல் லீலைகளை சுபவீ பங்குதாரர் என்று சொல்லி இருக்கின்றார்
ReplyDeleteமுகநூலில்
நிம்மி' மேட்டர்ல 'நக்கி' கைதானதுல 'கிழபோல்ட்' மீடியா லைம்லைட்டுக்கு வந்துரக்கூடாதுனு திசைதிருப்பும் வகையில 'வைர'த்த (பட்டை) தீட்டிகிட்டு இருக்கானுவ சங்கி-மங்கிக. நாம எல்லாம் ஒன்னா இருந்து கிழபோல்ட்டோட முகத்திரைய கிழிக்காம, நமக்குள்லேயே திரும்மி "நீ கையப்புடுச்சு இழுத்தையா? என்னா கையப்புடுச்சு இழுத்தையா!, நீ கையப்புடுச்சு இழுத்தையா??என்னா கையப்புடுச்சு இழுத்தையா!! னு காமடி பண்னிக்கிட்டு இருந்தால் அந்த கிழபோல்ட் தப்பிச்சுடும். இதுகூட புரியாத அளவுக்கு 'கம்மிஸ்'களுக்கு அறிவு கம்மீனு நாங்க நெனைக்கல! அனா நீங்க நெனக்கவச்சுடாதீங்க
ReplyDeleteஉபிக்கள் ஏன் வைரமுத்துக்கு இவ்வளவு முட்டு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. Metoo என்பது வைரமுத்து மட்டுமல்ல என்பதையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். கவர்னர் விஷயத்தில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். அவரை நீக்கம் வேண்டும் என்பதிலும்
Deleteதிராவிடம் பேச கலைஞருக்கு பின் உள்ள மக்கள் அறிந்த ஒருவர் வைரமுத்து. பார்பன கூட்டம் அவர் புகழை கெடுக்க , திராவிடம் ஒழியும் என்று நினைக்கிறது. மேலும் வரும் தேர்தலில் இதை பேச முடியும் என்று நம்புகிறது.
ReplyDeleteஜெயேந்திரன் செய்தது தவறு ஏன் எந்த பார்ப்பானும் ஏற்பதில்லை?
விஜயேந்திரன் செய்தால் அது சரியா?
வைரமுத்து செய்தாலும் தவறு தான். ஆனால் உண்மை அறியாமல் இப்போதே குற்றம் சொல்வது தவறு. இருந்தும் பார்பனியம் வென்று விட்டது. உண்மை எதுவாக இருந்தாலும் முழு இழப்பு அவருக்கு ஏற்படுத்த பட்டு விட்டது.
பல வருடங்களுக்கு முன்பே ட்விட்டரில் தன்னிடம் தவறாக எழுதியவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று நடவடிக்கை எடுத்த துணிச்சலானவர் சின்மயி.தனக்கு வைரமுத்து செய்த தவறை தெரிவிக்க இத்தனை ஆண்டுகள் தயங்கினாரா?
ReplyDeleteசின்மயி வைரமுத்து மீது சொல்லும் குற்றசாட்டு நடந்த சுவிட்சர்லாந்தில் சின்மயி தங்கியிருந்த வீட்டுகார தமிழர் சொல்வதை வைத்து பார்த்தா, அத்துடன் தனது திருமணத்திற்கு அவரை அழைத்தது, பின்பு அவர் காலில் விழுந்து அவரின் அருளை பெற்றுகொண்டது, அவரே ஏற்பாடு செய்த புத்தக வெளியீட்டு விழாவில் இவர் பாடியது, அவர் பத்ம பூஷன் விருது பெற்றதிற்காக இவர் வாழ்த்தியது,இவற்றை எல்லாம் பார்த்தா இப்போது இவர் சொல்வது வைரமுத்து மீது அவதூறு ஏற்படுத்துவதற்காகவே சொல்லும் குற்றசாட்டாகவே தெரிகிறது.
வைரமுத்து மீது இவர் அவதூறு செய்கிறார் என்பதிற்காகவே சின்மயிக்கு அடுத்த வீர தமிழிச்சி என்ற ஒளிவட்டமே கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete