Friday, December 4, 2020

அடடே! அமர்க்களம் ரஜினி!

 


உங்கள் மூவர் கூட்டணி அமர்க்களமாக உள்ளது ரஜினி. உங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

கொலுகைன்னாலே தலை சுத்திடும். வாடகை கொடுக்க மாட்டீங்க, சம்பளம் கொடுக்க மாட்டீங்க, சொத்து வரி கட்டாம இருக்க முடியுமான்னு வழக்கு போடுவீங்க! கொரோனா வார்ட் அமைக்கக் கூடாதுன்னு கல்யாண மண்டபத்தை பூட்டி வைப்பீங்க, "நிலம் நம் உரிமை" ன்னு வஜனம் பேசிட்டு "போராட்டம்னா தமிழ்நாடே சுடுகாடாயிடும்" ன்னு சொன்னீங்க. அன்னிக்கு நீங்க கத்தின "ஏய்" எல்லா தமிழர்களையும் பார்த்துதான். இப்போ கூட நீங்க தோற்றுப் போனா அது மக்களோட தோல்வின்னு சொல்றீங்க.

உங்களுக்கு இரண்டு பக்கமும் நிக்கறவங்க கூட உங்களை மாதிரிதான். 

அட! பாஜகவுல அறிவு சார் பிரிவு கூட வச்சுருக்காங்களேன்னு யோசிச்சா அப்புறம்தான் அந்தாளோட யோக்கியதை பற்றிய செய்தி வந்துச்சு.



24/12/19 அன்று ஆந்திர மாநில ராஜ்பவன் சென்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட படத்தை ஆந்திர மாநில ஆளுநரே தான் முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறார்.  

இதற்கு சில எதிர்வினைகள் வருகின்றன. அதில் ஒன்று பூமிகா ரமணி என்பவர் இட்ட பதிவு. " மேடம் இவர்கள் எல்டி என்ற பெயரில் ஒரு கம்பனி வைத்திருந்தனர். அந்த கம்பனி ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. அதனை மூடிவிட்டனர்.அந்த கம்பனியின் முதல் ஆர்டரில் மோசடி செய்தனர்.  தயவு செய்து அவர்களது முழு விபரங்களையும் பரிசோதனை செய்து பாருங்கள். இவருக்கு சென்னையில் பயங்கரமான பெயர் இருக்கிறது. உங்கள் பெயருக்கும் புகழுக்கும்  இது போன்ற கான்மேனை 
( con.man cunning man இருக்கலாம்)  ஏன் அங்கீகரிக்கிறீர்கள்? என்று பதிவிட்டுள்ளார்.  

மகேஷ் இஷா என்பவர், "அக்கா நீங்க ஏன் இது போன்ற மோசடிப் பேர்வழிகளை அங்கீகரிக்கிறீர்கள்" என்று கேட்டு உள்ளார். அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதில் கூறியதாக அவரது முக நூல் பதிவில் இல்லை.   தமிழ் நாட்டு மக்கள் இந்த குற்றச்சாட்டை  பரிசோதித்து பார்க்கவில்லை என்றால்? அதுவும் ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு.

இன்னொரு பக்கம் இருக்காரே, அவரு இன்னொரு அற்புதம்.

ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடியே அவருக்கு தரகுப்புயல் என்று பெயர் வைத்தேன். 23 செப்டம்பர் 2013 ல் "தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்" (எவ்ளோ பெரிய தலைப்பு!) என்று எழுதிய போது நிறைய பேர் சண்டைக்கு வந்தாங்க. இந்த இணைப்புக்கு போனா   உங்களுக்கே தெரியும். (இதை ஒரு பாண்டிச்சேரி பத்திரிக்கை அப்படியே காப்பியடிச்சு போட்டாங்க, என் பெயரைப் போடாமல் பாமரன் என்ற பெயரில். அந்த பத்திரிக்கைக்கு மன சாட்சி என்று வேறு பெயர்)

அவரு உங்களைப் பற்றி என்ன எழுதியிருக்காரு தெரியுமா?



உங்க மேலே என்ன மரியாதை பாத்தீங்களா?

உலகின் அரசியல் வரலாற்றில் முதன் முதலாக பினாமியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பெருமை உங்களுக்குத்தான் உண்டு. மூன்று கேடிகள் கொண்ட அக்கட்சியை தெரியாத்தனமாக மக்கள் ஆதரித்தால் உங்க வஜனம்தான்.

"அந்த ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது"

நீங்க சொன்ன மாதிரியே கட்சி ஆரம்பிச்சு கொலுகையெல்லாம் ஏதாவது இருக்குன்னு சொன்னீங்கன்னா, அதுக்கப்பறமா மறுபடியும் வரேன். பை!

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மூடர் கூட்டம்... டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  3. Mental (sivaji Rao) katchi aarambi' chutaaraa?

    ReplyDelete