ரஜினிகாந்த்
கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக மூமூமூமூமூமூமூத்த்த பத்திரிக்கையாளர் என்ன சொல்லியிருக்கிறார்
என்று பார்க்க அவர் பக்கம் போனேன்.
மனுஷன்
செம குஷியா இருக்கிறாரு.
அறிவிப்பு
வந்த உடனே ஒரு பதிவு.
மு.க.ஸ்டாலின்
வெறுப்பரசியல் நடத்தும் போது ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி என்றொரு வீடியோ பகிர்வு,
ரஜினியால்
எல்லாம் முடியும் என்று திருக்குறள் உதாரணம்,
தலைவா
வா, மாற்றம் உன்னால்தான் சாத்தியம் என்று துக்ளக்கிற்காக ஒரு கட்டுரை
என்று
எழுதிக் கொண்டே இருக்கிறார். அர்ஜூன மூர்த்தி போல இவரையும் டெபுடேஷனில் அனுப்பி விட்டார்களா
என்று தெரியவில்லை.
ஆனால்
ஜாக்கிரதை மாலன். ரஜினிகாந்தால் உங்களுக்கு பத்து பைசா கூட வரப்போவதில்லை.
முதல்
மகள் திருமணத்தின் போதே ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கிறேன் என்று அறிவித்தார்.
அநேகமாக இன்னும் சில வருடங்களில் தனுஷே தன் மகனுக்கு திருமணம் நடத்தி விடுவார் என்று
நினைக்கிறேன். ஆனால் இன்னும் பிரியாணி விருந்துதான் நடக்கவில்லை.
ஆஷ்ரம்
பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்கவில்லை. ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை.
கல்யாண
மண்டபங்களை கொரோனா வார்டாக பயன்படுத்தப் போகிரோம்
என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்ததும் பராமரிப்புப் பணிகளுக்காக ராகவேந்திரா
மண்டபத்தை மூடி வைத்து சொத்து வரி கட்ட முடியாது என்று வழக்கு போட்டவர்.
அவர்
உங்களுக்கு பேமெண்டெல்லாம் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். டெபுடேஷனில்
அனுப்பினாலும் பேரண்ட் அமைப்புதான் பேமெண்ட் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை தொடர வேண்டும்
என்று பாஜகவிலேயே கறாராக பேசி விடுங்கள்.
பிழைப்புவாதியான
உங்களுக்கு அதெல்லாம் சொல்லித் தர வேண்டுமா என்ன?
பிகு:
நீங்கள் இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியரான கதையை அம்பலப்படுத்திய முரசொலி மீதான
கடுப்பை துக்ளக் கட்டுரையில் காண்பித்து விட்டீர்கள் போல! ஆனால் பதில் எங்கே சார்?
அந்த பகுதியில் மட்டும் உங்கள் வாசகங்களில் நான் புளிச்ச மாவு ஆஜானை பார்த்தேன்.
No comments:
Post a Comment