தீக்கதிர் செய்தி கீழே உள்ளது.
செல்ஃபி சவர்க்கர், வாஜ்பாய், எச்.ராசா இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள மோடியின் செல்லப் பிராணி அர்ணாப் கோஸ்வாமி விரைவில் மன்னிப்பு கேட்பதில் சதமடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
உண்மை இல்லாத மனிதனுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. ஆகவே மன்னிப்பு கேட்பதால் அவையெல்ல்லாம் வந்து விடப் போவதில்லை.
எனவே சதம் மன்னிப்பு அவருக்கு சாத்தியமே!
வி.டி. சாவர்க்கரை பின்னுக்குத் தள்ளினார் அர்னாப் கோஸ்வாமி.. பிரிட்டிஷ் அரசிடம் 2 மாதத்தில் 280 முறை மன்னிப்பு கேட்டு சாதனை...
ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்ட சாவர்க்கர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 1911, 1913, 1921, 24 ஆகிய ஆண்டுகளில் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கெஞ்சிக் கூத்தாடி சீக்கிரத்திலேயே வெளியே வந்தார். “பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய்தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்” என்று அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை.
பின்னாளில், வாஜ்பாய் உள்ளிட்ட இந்துத்துவா வாதிகளும் இதேபோல மன்னிப்பு கேட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.தற்காலத்தில், அந்த வேலையை செய்துவருபவர் அர்னாப் கோஸ்வாமி. பாஜக ஆதரவாளரும் இந்துத்துவா ஊடகப் பேர்வழியுமான இவர், இஷ்டத்திற்கு அடுத்தவர்கள் மீது அவதூறையும் வெறுப்பையும் அள்ளி வீசுவது, பின்னர் மன்னிப்பு கேட்டு, ஜகா வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் அவர் தற்போது வி.டி. சாவர்க்கரையே விஞ்சி விட்டது தெரியவந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்தியாவிலேயே ஏராளமான அவதூறு வழக்குகள் இருந்தாலும், வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்களை பரப்பியதற்காக அண்மையில் இங்கிலாந்து நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பு, அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ. 19 லட்சத்து 73 ஆயிரம் அபராதம்விதித்தது. அத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவி-யில் தனது மன்னிப்புக் கோரலை பகிரங்கமாக ஒளிபரப்பி யுள்ளார்.
ஆனால், இம்முறையையும் சேர்த்து அர்னாப் கோஸ்வாமி இதுவரை 280 முறை இங்கிலாந்து அரசிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2020 பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 280 முறை அர்னாப் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதில், சாவர்க்கரை அர்னாப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிய சாவர்க்கருக்கு ‘வீர்’ சாவர்க்கர் என்று பட்டம் கொடுத்த மோடி அரசு, அர்னாப்பிற்கு என்ன விருது கொடுக்க உத்தேசித்துள்ளது, மகாவீர் கோஸ்வாமியா அல்லது பரம்வீர் கோஸ்வாமியா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்லடித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment