Friday, December 4, 2020

போர்ட் வச்சீங்க, ரோடு?

 

கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வந்தால் வேலுர் (எழுத்துப் பிழை என்னுடையதில்லை) எங்கள் பகுதியில் வைத்திருக்கிற புதிய, அழகான போர்டுகள்தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக வேலூர் மாநகரத்தின் சாலைகள் படு கேவலமாக மாறியுள்ளது. அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் "கிடப்பது கிடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில் வை" கதையாக புதிய தெருப் பலகைகளை வைத்து நாங்கள் ஸ்மார்ட் சிட்டி என்று காண்பித்துக் கொள்கிறார்கள்.

"என் நாய் செத்துப் போச்சுடா, அதுக்கு பேர்லாம் வச்சேன்" என்ற நண்பனிடம் "பேர் வச்சியே, சோறு வச்சியா?" என்று கேட்ட நாகேஷின் கேள்வியைத்தான் வேலுர் மாநகராட்சியிடம் கேட்க வேண்டியுள்ளது.


வைத்த போர்டைக் கூட உருப்படியாக வைக்கவில்லை. வேலூர் வேலுர் ஆகி விட்டது. 

1 comment:

  1. உங்கள் பகுதி என பெருமை வேண்டாம்,பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலைதான்!

    ReplyDelete