Thursday, December 24, 2020

என்ன ஆனார் MGR?

 


மேலே உள்ள படம் எங்கள் புதுவை கிளை 2 ன் தோழர் எஸ்.செல்வராஜின் மகன் அனிஷ் பாரதி வரைந்தது.

எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு தன் மகன் வரைந்தது என்ற அவர் குறிப்பைப் பார்த்தவுடன்தான் இன்று எம்.ஜி.ஆர் நினைவு நாள் என்பது நினைவுக்கு வந்தது.

வழக்கமாக எனது வீட்டிலிருந்து அலுவலகம் வரும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்தது நான்கைந்து இடங்களிலாவது சின்ன ஷாமியானா போட்டு எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து ஒலி பெருக்கிகளில் அவர் பாடல்களை ஒலித்துக் கொண்டிருப்பார்கள். 

இன்று அப்படி எதுவும் கண்ணில் படவில்லையே, ஒரு வேளை அலுவலகம் வரும் அவசரத்தில் நாம்தான் கவனிக்கவில்லையோ என்று எண்ணி, வீடு திரும்பும் போது நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இந்த முறை எம்.ஜி.ஆர் இருந்தார். அந்த இடத்திலும் கூட எம்.ஜி.ஆர் பாட்டு இல்லை, பிள்ளையார் பாட்டுதான்.

கடந்த வருடங்களில் மற்ற இடங்களில் இருந்த எம்.ஜி.ஆர் என்ன ஆனார்?

அவர் துவக்கிய கட்சியின் இன்றைய உரிமையாளர்களின் இன்றைய பெரிய முதலாளியாக மோடி மாறி விட்டதால் எம்.ஜி.ஆர் காணாமல் போய் விட்டாரோ?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஒருமை இங்கே அனுமதியில்லை

      Delete