Tuesday, December 22, 2020

ஒரு தகவலுக்காக

 










நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் கடுமையான சேதத்தை சந்தித்த சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் இன்று நிவாரணம் வழங்கப்பட்டது. 6 ஊர்களில் ரூ 2 லட்சம் பெறுமான புயல் நிவாரண உதவிகளை அவர்கள் வழங்கினார்கள்

வேலூர் கோட்டத்தில் உள்ள 23 கிளைகளில் பணியாற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள், முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் ஆகியோர் இதற்கான நிதியை வழங்கினர்.

*6 ஊர்களில்*

கடலூர் வண்டிப்பாளையம், குறிஞ்சிப்பாடி - கல் குணம், சிதம்பரம் அம்பேத்கர் நகர், இந்திரா நகர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய ஊர்களில் சுமார் 600 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் காய்கறி தொகுப்பு ஆகியவற்றை வழங்கினர்.

இந்த நிவாரண உதவி முகாமில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே. சுவாமிநாதன், வேலூர் கோட்டச் சங்க பொதுச் செயலாளர் தோழர் எஸ். இராமன், தலைவர் தோழர். எஸ். பழனிராஜ், டி. மணவாளன், ஜி. வைத்தியலிங்கம், வி. நாகராஜன், சி.கணேசன் ஆகிய அகில இந்திய இனசூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

மார்க்சிஸ்ட் கமயூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் மருதவாணன், இரமேஷ் பாபு, சிவகாமி, ராஜா, தண்டபாணி, ராஜு ஆகியோர் நிவாரண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

செய்தி - தீக்கதிர் 20.12.2020

No comments:

Post a Comment