Thursday, December 31, 2020

மோடி எனும் போலிக்கு பொருத்தமாக

 போலி தாகூருக்கு பொருத்தமாக

 


“Where the mind is without fear and

 Where the head is held high

 

என்று தொடங்கும் தாகூரின் கவிதையை நாம் பள்ளியில் படிக்கையில் பாடமாக படித்துள்ளோம்.  மேற்கு வங்கத்திற்கு செல்கையில் தாகூர் போல தன்னைக் காண்பித்துக் கொண்ட உலகின் மிகச் சிறந்த நடிகருக்காக யாரோ ஒருவர் தாகூர் கவிதையை மாற்றி எழுதியதை வாட்ஸப்பில் பார்த்தேன்.

 அது போலி தாகூருக்கு பொருத்தமாகவே உள்ளதால் அதனை பகிர்ந்து கொள்கிறேன். அத்தோடு அதனை தமிழாக்கமும் செய்து அதனையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 ~ Author unknown

 

Where the mind is without wisdom

And the face is eternally turned towards the camera

Where knowledge is commodified;

Where the world has been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of the IT cell

Where tireless PR stretches its arms towards total obfuscation

Where the clear stream of reason has lost its way

Into that land of bondage, mein Fuehrer,

You have let this country sink.

 

#FakeTagore

 

எங்கே மனதில் ஞானமில்லையோ,

எங்கே முகம் நிரந்தரமாக காமெராவை நோக்கி மட்டுமே திரும்பியுள்ளதோ,

எங்கே அறிவு விற்பனைப் பொருளாகியுள்ளதோ

எங்கே குறுகிய பார்வைகளால் உலகம் பல துண்டுகளால் உடைக்கப்பட்டுள்ளதோ,

எங்கே வார்த்தைகள் தகவல் தொழில் நுட்பக் குழு தயாரித்தது மட்டுமாகவே வெளி வருகிறதோ,

எங்கே ஓய்வில்லா விளம்பர நடவடிக்கைகள் முழுமையான குழப்பத்திற்கு மட்டும் இட்டுசெல்கிறதோ,

எங்கே தெளிவான சிந்தனை என்பது அடிமைத்தனம் மேலோங்கியுள்ள மண்ணில் தன் வழியை இழந்து விட்டதோ,

அப்படியாக, புதிய ஹிட்லரே,

நீ இந்த தேசத்தையே அழித்து விட்டாய்.

 

4 comments:

  1. கேரளா மாடல் கொரனாவை ஒழித்து விட்டோம் என போலியாக ஆனந்த கூத்தாடியவர்கள் இன்று எங்கே போனார்கள். சீனா கம்யூணிஸ்ட் ஆளும் கேரளா நாட்டிலே கோவிட் தொற்றில் தினமும் முதல் இடம். எங்கே போனது கேரளா மாடல். கேரளா அரசில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்த ஒரு பெண்மணி தகவல் தொடர்பு துறை அதிகாரி. தங்க கடத்தல் .. ஆகா அட்டகாசம். நாம சம்பந்தம் இல்லாம பிரதமரை திட்டிகிட்டு இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. கேரளாவில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனாவை மீண்டும் பரப்பிய கூட்டுக் களவாணிகள் நீங்கள்தானே! தங்கக்கடத்தலில் பி.எம்.எஸ் தலைவர் சிக்கியது தெரியாதா? புலனாய்வு பூனைகள் மூலம் கடுமையாக முயற்சித்தும் தோற்றுப் போன நீங்கள் இப்படித்தான் கதறுவீர்கள். நன்றாக கதறுங்கள். மோடி மாதிரி மட்டமான மனிதனை தூக்கிப் பிடிப்பவர்களும் ம்ட்டமான மனிதர்கள்தான்

      Delete
  2. 1962 சீனாவிற்க்கு எதிரான போரில் சீனாவை ஆதரித்தவங்க சொல்றாங்க. ஊழல் திமுகவிடம் 25 கோடி நிதி வேற. தான் வாழ்கையில் எந்த வேலைக்கு செல்லாமல் இருந்தவருக்கு இருக்க அரசு இடம் தான் வேனுமாம். அதான் வீட்ல மனைவிக்கு பென்சன் வருதுல்ல.

    ReplyDelete
    Replies
    1. முதலில் பிஎம் கேர்ஸ் க்கு கணக்கு காண்பிச்சுட்டு பேசுங்க.

      Delete