Monday, March 22, 2021

அசுரர்களுக்கு வாழ்த்துக்கள்



 சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்திற்காக பெற்றுள்ள திரு தனுஷ்

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றுள்ள திரு விஜய் சேதுபதி

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை அசுரன் படத்திற்காகப் பெற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன்.

சிறந்த இசைக்கான தேசிய விருதை விஸ்வாஸம் படத்திற்காக பெற்றுள்ள இமான் ஆகிய அசுரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அசுரன் படம் பார்த்தவுடன் எழுதிய பதிவில் 

குடிகாரனாக, சமரசம் செய்து கொள்கிறவனாக, ஆவேசமாய் எழுகிறவனாக அற்புதமாய் அடுத்த தேசிய விருதை தட்டிச் செல்லப் போகிறார் தனுஷ். 

என்று எழுதியிருந்தது நிஜமானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அப்போது எழுதிய   "வெக்கையை வைரமாக தீட்டிய அசுரன்" என்ற பதிவை முழுமையாக படிக்க இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்

விஸ்வாஸம் படத்தின் "கண்ணான கண்ணே" பாடலை என் மகன் வயலினில் வாசித்திருந்தான். 

அதன் யுட்யூப் இணைப்பு இங்கே

No comments:

Post a Comment