Sunday, March 7, 2021

ஒட்டகத்தைப் போலவே!!!

 


இடத்தை கேட்டு மடத்தைப் பிடுங்குவார்கள்

 

*நாளொரு கேள்வி: 25.02.2021*

 

இன்று நம்மோடு நெல்லைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *செ. முத்துக்குமாரசாமி*

######################

 

*இடத்தை கேட்டு மடத்தைப் பிடுங்குவார்கள்*

 

 

*கேள்வி:*

 

இது எல்..சியின் பங்கு விற்பனை மட்டுமே. தனியார்மயம் அல்ல என்று சிலர் கூறுகிறார்களே?

 

*செ. முத்துக்குமாரசாமி*

 

இது தனியார் மயம் இல்லை என்று சிலர் கூறி வருகிறார்கள். இது தவறு. இன்று அரசு தன் வசம் உள்ள பங்குகளில் ஒரு பகுதியினை மட்டுமே விற்றாலும் கூட, எல்..சி பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினை *படிப்படியாக இழப்பதை* நோக்கிய முதல் அடியாகவே இருக்கும்

 

இப்போதே 5 ஆண்டுகளுக்குள்ளாக *75 % க்கு அரசின் பங்கு குறையுமென* பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆகவே 5 %, 10 % எனத் துவங்கினாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மேலும் விற்கப்படுமென்றெ பட்ஜெட் *சிக்னல்* கொடுத்துள்ளது. எந்த பட்டியலிடப்பட்ட நிறுவனமும் 5 ஆண்டுகளுக்குள்ளாக 25 % பங்குகளை விற்று விட வேண்டுமென்பதே *"செபி"* யின் விதிமுறையாகும்

 

எல்..சி நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அளவில்லாத ஆசை கொண்ட பெரும் தொழிலதிபர்கள் அதிக பங்குகளை  வாங்குவார்கள். அது 50% க்கும் அதிகமாகும் பொழுது  தனியார்மயமாக மாறும். இது நமது கற்பனை அல்ல. இந்த பட்ஜெட்டிலேயே *ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமும், இரண்டு அரசு வங்கிகளும்* தனியார் மயமாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

இது போன்றதே *அன்னிய முதலீட்டு அனுமதியும்....* காப்பீட்டுத் துறையானது, தனியாருக்குத் திறந்துவிடப்படும் போது, 26% அந்நியத் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டது. பின்னர் அது 49% ஆக உயர்ந்தது. தற்போது 74% ஆக உயர்த்தப்படும் என்று அரசு கூறுகிறது. படிப்படியாக அன்னியர் பிடியும் தனியார் நிறுவனங்களில் இறுகுகிறது

 

ஆகவே தனியார்மயமும், அன்னிய முதலீட்டு அனுமதியும் *இரட்டைப் பிறவிகள்.* படிப்படியாக இடம் கேட்டு பிறகு மடத்தைப் பிடுங்குவார்கள்.

 

*****************

*செவ்வானம்*

 

No comments:

Post a Comment