நேற்றைய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு எங்கள் வேலூர் கோட்ட
அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் போது எங்கள் இணைச்செயலாளர் தோழர்
எஸ்.ரமேஷ்பாபு மத்தியரசைப் பற்றி ஆவேசமாக பேசுகையில்
“முதல் முறை நாடாளுமன்றம் சென்ற போது மோடி நாடாளுமன்றப்
படிக்கட்டுக்களை முத்தமிட்டு உள்ளே போனார். அந்த நடிகர் அங்கே இருந்து கொண்டு
செய்தது எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானதுதான். அடுத்த நாடாளுமன்ற
தேர்தலின் போது அந்த முத்தமிட்ட உதடுகள் மண்ணைக் கவ்வ வேண்டும்:
என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
அது எவ்வளவு சரியான கோபம் என்பதை மோடி வகையறாக்கள் நேற்றே
உணர்த்தி விட்டார்கள்.
எங்கள்
வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் ஒரு
கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
இன்சூரன்ஸ்
துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தும் மசோதாவிற்கு
எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக களமாடிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது
மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் துடிக்க, தீவிர ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டும் என்பதால் நாடாளுமன்ற நிதியமைச்சகத்தின் நிலைக்குழு பரிசீலனைக்கு உட்படுத்த
வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கை செவிகளை இறுக்க மூடிக்கொண்ட அரசின் காதுகளில்
விழவே இல்லை.
ஆயுள்
காப்பீட்டுத்துறையில் எட்டு நிறுவனங்களிலும் பொதுக் காப்பீட்டுத்துறையில் ஐந்து நிறுவனங்களில்
மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. மீதமுள்ள 31 நிறுவனங்களுக்கு 49 % அன்னிய மூலதனமே
தேவையில்லாத போது எதற்காக 74 % அன்னிய முதலீடு? இம்மசோதாவின் மூலம் 74 % அன்னிய மூலதனத்தை
மட்டும் அனுமதிக்கவில்லை, நிறுவனங்கள் மீதான நிர்வாக உரிமையையும் அன்னியர்களுக்கு தாரை
வார்த்து விட்டனர்.
அன்னிய
மூலதன வரம்பை உயர்த்துவதனால் என்னென்ன பிரச்சினைகள் என்பதைப் பற்றி முன்னரே “ஆளில்லா
கடையில் யாருக்காக மோடிஜி?” என்று விரிவாக எழுதியுள்ளேன்.
இந்த இணைப்பின் மூலமாக மூலம் தயவு செய்து அதனை முழுமையாக படியுங்கள்.
ஒரு
மோசமான சட்டத்தை ஒரு சின்ன விவாதம் கூட இல்லாமல் நிறைவேற்றியுள்ள அரசு இது.
நாடாளுமன்ற
கட்டிடத்தின் படிக்கட்டுக்களை முத்தமிட்டு நாடகமாடி விட்டு நாடாளுமன்ற மரபுகளை குழி
தோண்டி புதைப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ள மோடி மண்ணை கவ்வுவதுதான் நீதி.
No comments:
Post a Comment