மைனர்
பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக
அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக
கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி
கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.
ஆனால்
அதையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொன்னால் கேட்பதற்கே அது எவ்வளவு நாராசமாக
உள்ளது!
ஒரு
பாலியல் குற்றவாளிக்கு தலைமை நீதிபதி சட்டத்தை மீறி இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை
என்ன?
மகாபாரதக்
கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!
இப்படிப்பட்ட
தீர்ப்பிற்கு விவேக் அளித்த தீர்ப்பே மேல் என்று சொல்ல வைத்து விட்டீர்களே யுவர் ஆனர்.
ஒரு
சின்ன டவுட் ஜட்ஜய்யா
உங்களுக்கு
முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் விடுவித்ததால் மற்ற
பாலியல் குற்றவாளிகளுக்கும் அதே சலுகையை காண்பிக்கிறீர்களோ?
No comments:
Post a Comment