Friday, March 5, 2021

பாவம் அத்வானி வகையறாக்கள்

 


கடந்த மக்களவை தேர்தலின் போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வயதை காரணம் காட்டி மறுக்கப்பட்டது.

கடந்த வாரம் பாஜகவில் இணைந்த மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஈ.ஸ்ரீதரன், கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டுள்ளார். 

அவருக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை ஜெண்டில்மேன், ஜஸ்ட் 88.

இந்த தகவலை கேள்விப்படும் அத்வானி வகையறாக்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும்!

போன வாரம் கட்சியில் சேர்ந்த ஒருவரை ஏன் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் ?

எனக்கு தோன்றுகிற இரண்டு காரணங்கள்.

இது நாள் வரை கேரளாவில் பாஜகவின் முகமாக இருந்தவர் ஓ.ராஜகோபால். விவசாயிகள் மசோதாவை கேரளாவில் அமலாக்க மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவே கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு என்று பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ வான ஓ.ராஜகோபால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அவரைத் தவிர பாஜகவில் உள்ள இதர முகங்கள் எல்லாம் ரௌடி என்றும் பொறுக்கி என்றும் கிரிமினல் என்றும் புகழ் பெற்றவர்கள். அவர்கள் பெயரை சொன்னால் கிடைக்கும் ஒன்றிரண்டு ஓட்டுக்கள் கூட இல்லாமல் போய் விடும்.

அதனால்தான் 88 வயது மனிதருக்கு முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

எப்படியானாலும் நாம் ஜெயிக்கப் போவதில்லை. இதில் யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்று மற்றவர்களும் நினைத்திருப்பார்கள் போல.

ஆனாலும் இத்தகவலால் அத்வானிக்கு வயிறு எரியுமல்லவா?

பிகு : அத்வானி மீது எந்த காலத்திலும் பரிவு இருந்தது கிடையாது. இந்தியாவில் மத வெறியை பரப்பிய மிகப் பெரிய கிரிமினல் அவர் என்பதை எந்நாளும் மறந்து விட முடியாது.


No comments:

Post a Comment