Monday, March 1, 2021

மாரீச மானைக் காட்டி ஏமாற்றும் . . . . .

 



 

*நாளொரு கேள்வி: 24.02.2021*

 

இன்று நம்மோடு நெல்லைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *செ. முத்துக் குமாரசாமி*

######################

 

*கேள்வி:*

 

எல்ஐசியின் பங்குகள் சந்தைக்கு வந்தால் பொதுமக்களும் வாங்கலாம். அது நல்லதுதானே என்று சிலர் அவர் பேசுகிறார்களே?

 

*முத்துக்குமாரசாமி*

 

இது எல்..சி பங்கு விற்பனைக்கு மக்களின் இசைவைப் பெறுவதற்கான *நாடகம்.* அதில் இடம் பெறும் *வசனம்.* அவ்வளவுதான்

 

*பொதுமக்கள் பங்கேற்பு* (Public Participation) என்பதே தவறான சொல்லாகும். அரசு 10% பங்குகளை மட்டும் விற்றால் கூட அவற்றின் மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாயாகும். இவ்வளவு மதிப்புள்ள பங்குகளில் எவ்வளவு மக்களுக்கு போய்ச் சேரும்? வாங்கும் சக்தி யாருக்கு இருக்கும்? பெரிய நிறுவனங்கள்தானே அவற்றை வாங்க முடியும். பொதுமக்களில் ஓரளவு வசதி உள்ளவர்கள் வாங்கினாலும் அவர்கள் கைகளிலேயே அவை தங்குமா? பின்னால் நிறுவன முதலீட்டாளர்கள் கைகளுக்குப் போகாமல் தடுக்க முடியுமா?  

 

இன்றைய சூழலில் நாட்டின் நிலக்கரி சுரங்கங்களையும், ஆறு விமான நிலையங்களையும் அதானி எடுத்துக் கொள்கிறார். 150 தொடர் வண்டிகள் மற்றும் தொலைத்தொடர்பு உரிமைகளை ரிலையன்சின் ஜியோ எடுத்துக் கொள்கிறது. நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் அதானிக்குக் கொடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் எதை உணர்த்துகிறது? எல்..சி யின் பங்குகளையும் பெரிய நிறுவனங்கள்தான் கைப்பற்றத் துடிக்குமென்பது தெளிவாகத் தெரியவில்லையா?

 

*நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனியில்* 100 % பங்குகள் அரசிடம் இருந்தன. 2017 ல் பங்கு விற்பனை நடந்தது. அரசின் பங்குகள் இப்போது 85.44 % ஆகவே உள்ளது. டிசம்பர் 2017 ல் இருந்து இன்று வரை டிசம்பர் 2020 வரையிலான காலாண்டு வரை *பங்கு உடமை சதவீதத்தை* பாருங்கள். எந்த கட்டத்திலும் விற்பனை செய்யப்பட்ட 14.56% பங்குகளில் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் கைவசம் இருந்த பங்குகள் 1.23% தாண்டவில்லை. சில காலாண்டுகளில் 1% க்கு கீழே கூட போனது. 0.93 % க்கு ஜூன் 2019 ல் வீழ்ந்தது

 

*ஜெனரல்  இன்ஸ்யூரன்ஸ் மறு காப்பீட்டு நிறுவனத்தில்* 100 % பங்குகள் அரசிடம் இருந்தன. 2018 ல் பங்கு விற்பனை நடந்தது. அரசின் பங்குகள் இப்போது 85.8 % ஆகவே உள்ளது. மார்ச் 2018 ல் இருந்து இன்று வரை டிசம்பர் 2020 வரையிலான காலாண்டு வரை *பங்கு உடமை சதவீதத்தை* பாருங்கள். எந்த கட்டத்திலும் விற்பனை செய்யப்பட்ட 14.2 % பங்குகளில் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் கைவசம் இருந்த பங்குகள் 2.3 % தாண்டவில்லை. சில காலாண்டுகளில் 2 % க்கு கீழே கூட போனது. செப் 2018 ல் இருந்து  ஜூன் 2019 வரையிலான ஓராண்டு முழுவதும் 1.9 % ஆகவே இருந்தது.

 

எனவே *நிறுவன முதலீட்டாளர்கள்* கைகளில்தான் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனப் பங்குகள் 13.3 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ் மறு காப்பீட்டு நிறுவனத்தில் 12 % ம் உள்ளன

 

ஆகவே பொது மக்கள் பங்கேற்பு என்பது *மாரீச மான்தான்.*

 

******************

*செவ்வானம்*

No comments:

Post a Comment