சென்னை
புத்தக விழாவுக்கு இன்று மதியம் விடுப்பெடுத்து புறப்படுகிறேன். 2006 ம் ஆண்டு தொடங்கிய
பழக்கம் தொடர்கிறது. ஒரு ஆண்டில் படிக்கும் நூல்களில் பெரும்பான்மையானவை சென்னை புத்தக
விழாவில் வாங்குபவைதான். கொரோனா காலத்தில் இந்த ஆண்டு புத்தக விழா இருக்குமோ என்ற சந்தேகம்
இருந்தது.
லாக்டவுன்
காலத்தில் பொள்ளாச்சி “எதிர்” வெளியீட்டிலிருந்து சில நூல்களை வரவழைத்து படித்தேன்.
பணத்தை அனுப்பி தகவல் சொன்ன நாளன்றே அவர்கள் நூல்களை அனுப்பிய வேகத்தையும் பாராட்ட
வேண்டியது முக்கியம்.
கடந்த
நான்கு வருடங்களாக பெரும்பாலும் நான் போகி அன்றுதான் செல்வேன். புத்தக விழாவிற்கு போய்
விட்டு அப்படியே மகனையும் வேலூருக்கு அழைத்து வர வசதியாக இருக்கும் என்பதால் அந்த நாளை
தேர்வு செய்வேன்.
இந்த
ஆண்டும் போகி அன்று சென்னை செல்கையில் ஒரு மினி புத்தகக் கண்காட்சியை அன்றுதான் நந்தம்பாக்கம்
ட்ரேட் செண்டருக்கு எதிரில் இருந்த ஒரு அரங்கில் துவக்கி இருந்தார்கள். ஏற்கனவே போக்குவரத்து
நெரிசலில் கால தாமதம் ஆகியிருந்தது. இருப்பினும் அந்த அரங்கைக் கண்டதும் மனம் கேட்கவில்லை.
பத்தே
பத்து நிமிடங்கள் என்று ஒரு காலக் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு சில அரங்குகளுக்குள்
மட்டும் நுழைந்து மூன்று புத்தகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியேறினேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அங்கே வந்திருந்தார். அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் “வணக்கம் தோழர்” என்று
மட்டும் சொல்லி விட்டு நகர்ந்தேன்.
சென்னை
புத்தக விழாவுக்கு செல்லும் முன்பு நமது மனதில் ஒரு பட்டியல் இருக்கும். அந்த நூல்கள்
இருக்கும் அரங்குகளை கண்டுபிடிக்க முடியாமல் வாங்க முடியாமல் போய் விடும். இந்த முறை
அது போல் நிகழாமல் இருக்க வாங்க விரும்பும் ஒரு முப்பத்தி ஐந்து புத்தகங்கள், அரங்கு
எண் ஆகியவற்றை ஒரு எக்ஸெல் ஷீட்டில் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு விட்டேன்.
அவற்றை
வாங்கிய பிறகு மற்ற அரங்குகளுக்கு செல்ல திட்டம். வாங்கிய நூல்களை சுமப்பதற்கு கைகளும்
நடப்பதற்கு கால்களும் ஒத்துழைக்க வேண்டும். அதை விட முக்கியமாக ஒவ்வொரு மாத ஊதியத்திலும்
புத்தக விழாவிற்கென்றே தனியாக ஒதுக்கி வைத்துள்ள தொகையும் தீராமல் இருக்க வேண்டும்.
Heading should have been as Moochirukkum varai. Mind will create it's own ways to work, till it stops.
ReplyDelete