Monday, March 1, 2021

மதிப்பீட்டை நிஜமாக்கிய மத்யமர்களுக்கு நன்றி

 


மோடியை ஆதரிப்பவர்களைப் பற்றி கடந்த எட்டு வருடங்களாக என்னுடைய மதிப்பீடு எளிமையானது.

அவர்கள் அடி முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள் என்பதுதான்.

இது கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை என்பதை அவர்கள் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

நேற்று முன் தின்ம் "மத்யமர்" குழுவில் 

மோடி அரசு - பயம். பயமின்றி வேறில்லை"

என்ற பதிவை அவர்களுக்காகவே பிரத்யேகமாக எழுதினேன். நேற்று அதனை இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்.

ஊடகங்களை சந்திக்க மோடி அஞ்சுகிறார். 

எல்.ஐ.சி பங்கு விற்பனைக்காக எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தனியாக ஒரு மசோதா கொண்டு வர அஞ்சி நிதி மசோதாவுக்குள் ஒளிந்து கொள்கிறது அரசு.

இவைதான் அந்த பதிவின் சாராம்சங்கள்.

இவற்றுக்கு உரிய பதிலளிக்க கையாலாகாத மத்யமர் சங்கிகள் அளித்துள்ள பின்னூட்டங்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் கீழே உள்ளது.
















மோடி ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டினால் அவர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடுவது, அவர்களை 200 ரூபாய் உபி என்பது, கம்யூனிஸ்டுகள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் உள்ள வெறுப்பு (இவர்களெக்கெல்லாம் பெரிய முதலாளிகள் என்று வேறு நினைப்பு) அரசுத்துறையிலோ அல்லது பொதுத்துறையிலோ வேலை கிடைக்காத பொறாமையை வேலை கிடைத்த அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களை திட்டுவது, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் வேலை செய்வதால் பொதுத்துறை நிறுவனங்களை இழிவு படுத்தும் ப்ரொபஷனல் எதிக்ஸ், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஜாதி மேலாதிக்க உணர்வு இவை அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம்.  எழுப்பிய பிரச்சினை மீது பேச அங்கே ஒரு சங்கி கூட கிடையாது. காரணம் மிகவும் சுலபம். படித்தவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிந்தனையில் மத வெறியும் ஆதிக்க வெறியும் ஊறிப் போய் கிடக்கிறதே தவிர சிந்திக்கும் சக்தி என்பது மழுங்கிப் போயிருக்கிறது.

அதனால் மீண்டும் மீண்டும் சொல்வேன்,

மோடியை ஆதரிப்பவர்கள் அடி முட்டாளாகவும் அயோக்கியர்களாகவும்  மட்டுமே இருக்க முடியும்.

No comments:

Post a Comment