Sunday, March 21, 2021

வெட்கமே இல்லையா மாலன்?

 




மூத்த்த்த்த பத்திரிக்கையாளரின் முக நூல் பக்கமே நீண்ட காலமாக செல்லவில்லை.  பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு பற்றி கருத்து கேட்காமல் 2006-2011 கலைஞர் அரசு பற்றி கருத்து கேட்கும் அவரது புத்திசாலித்தனம் மெய்சிலிர்க்க வைத்தது. (பத்து வருட அதிமுக ஆட்சியைப் பற்றி எதுவும் பேசாமல் அதற்கு முந்தைய திமுக ஆட்சியைப் பற்றி பேசுவதன் சூட்சுமம் பற்றி தனியாக எழுத வேண்டும்)

 அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பற்றிய இந்த பதிவு கண்ணில் பட்டது.



 இந்த பதிவின் மூலம் மாலன் யாரை தூண்டி விடுகிறார்?

 பரிசு கிடைத்த இமையத்தின் படைப்பை விட இவர் படைப்பு தேவலாமே! அதற்கு கிடைத்திருக்கலாமே! இதற்கு கொடுத்திருக்கலாமே என்ற விவாதத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன?

 மாலனின் சிண்டு முடிதலுக்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

 

ஒன்று திரு இமையம் தன்னை திமுக உறுப்பினர் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளவர்.

 

இரண்டு திரு இமையம் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், அவர்களின் வலிகளை தன் எழுத்தில் கொண்டு வருபவர்.

 இரண்டு காரணங்களுமே மாலனின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

 அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் இப்படி நரித்தந்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

திராவிட இயக்கத்தின் மீது, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மீது பொய்யும் புரட்டுமாக வரலாற்றுத் திரிபோடு விஷம் கக்கிய காரணத்தால் கடந்தாண்டு "சூல்" நாவலுக்கு விருது கிடைத்த போது இவர் அப்படி கேட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். 

 ஆனால் இது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதை விட அசிங்கமாக அவர் நடந்து கொண்டதைத்தான் பார்த்து விட்டோமே!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க மாலனின் விஷக் கூச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்று கூட தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசனின் முக நூல் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால் பதில் மட்டும் சொல்லவில்லை.

 இப்படி இங்கே கம்பு சுத்துகிற மாலன், ட்விட்டரில் என்ன செய்கிறார் தெரியுமா?

 அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

No comments:

Post a Comment