*நாளொரு கேள்வி: 09.03.2021*
தொடர் எண் : *282*
இன்று நம்மோடு அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் *ஹன்னன் முல்லா*
######################
*ஒற்றுமை மலர்கள் பூத்த 100 நாள் தோட்டம்*
கேள்வி:
100 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் டெல்லி விவசாயிகள் முற்றுகை என்ன குறிப்பிடத்தக்க பரிணாமங்களை களத்தில் போராடுபவர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது?
*ஹன்னன் முல்லா*
100 நாட்களாக நீடிக்கும் போராட்டம் ஒரு வரலாற்று ரீதியான ஜனநாயக இயக்கமாக மாறியது. *மதம், சாதிய கட்டுகள் தகர்ந்தன.* ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை பிரிவினையை உருவாக்க முயற்சிக்கையில், இந்தகிளர்ச்சி விவசாயிகள் மத்தியில் *புதிய அடையாள உணர்வை* உருவாக்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகளின் மதச்சார்பற்ற உணர்வில் ஒன்றுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் *ஜாட் மற்றும் முஸ்லிம்களுடன்* பாஜக மோதலை உருவாக்கியது. போராட்டம் இரு பிரிவுகளையும் ஒன்றிணைத்தது. *ஹரியானாவும் பஞ்சாப்பும் பல காலங்களாக முரண்படுகின்றன. இந்த போராட்டத்தில் ஹரியானா மக்கள் பஞ்சாபிகளை ஏற்றுக்கொண்ட விதம் மனதைக் கவர்கிறது.* பஞ்சாபிகளுக்கும் ஹரியானா மக்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமை உருவாகியுள்ளது.
நாட்டின் தொழிலாளி வர்க்கம், போராட்டத்தின் தொடக்கத்திலிருந்து போராட்டத்தை ஆதரித்து வருகிறது. விவசாயிகளின் கிளர்ச்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வலுவான ஆதரவை அளித்துள்ளன. *இதற்கு முன்னர் ஒருபோதும் விவசாயிகளும் தொழிலாளர்களும் இதே போன்ற பிரச்சனையில் ஒன்றிணைந்திருக்கவில்லை.
* மூன்று விவசாய சட்டங்களை பின்பற்றி கார்ப்பரேட்டுகளால் விவசாயிகளின் உயிருக்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளது. நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் கீழ், தொழிலாளர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நிறுவனங்களுக்கு அடிமைகளாக மாறுவார்கள்.
*பெண்களும், விவசாயிகள் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.* பெண் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களில் சுமார் 60 சதவிகிதம் பெண்கள். இருப்பினும், நிலப்பிரபுத்துவ அமைப்பில், அரசாங்க ஆவணங்கள் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் அவர்களின்பெயரில் நிலம் இல்லை. கணவர் இறந்தாலும் பெண்களுக்கு உதவி கிடைக்காது.
போராட்டத்தில் இளைஞர்களும் மாணவர்களும் பங்கேற் கின்றனர். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பல அரசியல் கட்சிகள் இப்போது போராட்டத்தை ஆதரிக்கின்றன.
*செவ்வானம்*
போராட்டம்
நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment