Tuesday, March 2, 2021

அமித்ஷாவுக்கு கல்தா உறுதி

 


இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர், முதன் முதலில் மே தினத்தை கொண்டாடியவர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் பிரகடனத்தை தந்தை பெரியாருடன் இணைந்து தமிழில் வெளியிட்டவர், கான்பூர் சதி வழக்கின் குற்றவாளி. 



இத்தனை பெருமை மிகு தோழர் சிங்காரவேலரின் படத்திற்கு மாலை அணிவித்து சிலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் அமித் ஷா




கோல்வால்கரின் பிரகடனப்படி அவர்கள் திரிசூலத்தின் மூன்று முனைகளில் சம்ஹாரம் செய்ய வேண்டிய மூன்று எதிரிகள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள்.

அப்படி இருக்கையில் சீன அடிமை என்றும் கம்மிகள் என்றும் கம்னாட்டிகள் என்றும் சங்கிகளால் போற்றப்படும் கம்யூனிஸ்ட் ஒருவரின் படத்திற்கு அமித் ஷா மாலை போடலாமா?

சங்கிகள் அதிலும் மத்யமர் குழு சங்கிகள் பொங்கி விட மாட்டார்களா?

நிச்சயம் அமித் ஷா பாஜகவிலுருந்து துரத்தப் படுவார். ஆமாம் விழுப்புரத்தில் பாலியல் கொடுமை செய்த கலிவரதனைக் கூட ஏற்றுக் கொள்வார்கள், நிச்சயம் அமித் ஷாவை மன்னிக்க மாட்டார்கள்.

அவ்வளவு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஜென்மங்கள் அவர்கள்.

செல்பி சவர்க்கருக்கு ஏன்யா சிலை வைக்கலை?

1 comment:

  1. Ramani Sir, could you publish this as blog please.

    திரு. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதோடு, ஒரு சாமானியனாக ஒரு வேண்டுகோளுடன் இந்த திறந்த கடிதம் :

    ஸ்டாலின் அவர்களே,
    தமிழக தேர்தல் தொடர்பாக வரும் கிட்டத்தட்ட எல்லா யூகங்களிலும் உங்களுக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் என்பதாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை சற்று உற்று ஆராய்ந்தால் கழக மற்றும் கூட்டணிகளின் நிரந்தர வாக்குகளாக 26% சதமும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் 14% சதம் வாக்குகளும் ஆக மொத்தம் 40% சதம் வாக்குகள் வரலாம் என கணித்திருக்கிறார்கள்.

    ஆனாலும் வெற்றி உறுதி என அமர்ந்துகொள்ள,
    இது ஒன்றும் அலை அல்ல!!. இரண்டு அல்லது மூன்று சதம் வாக்குகள் சற்றே திரும்பினாலும் மொத்த வாய்ப்பும் கவிழ்ந்து விட கூடும். தேர்தல் டெக்னலாஜியில் பி.எச்.டி பட்டம் பெற்ற பிஜேபி எதிரணியில் இருக்கையில் இது சுலபமாக நடக்கலாம்.

    இங்கேதான் எங்களை போன்ற சாமானியர்கள் உங்களுக்கு தோள் கொடுக்க தயாராக உள்ளோம். ஆனால் அதில் ஒரு பிரச்சினை உள்ளது. என்னதான் நாங்கள் கடந்த சில வருடங்களாக மத்திய மாநில அரசின் மேல் சொல்லிலடங்கா அதிருப்தியில் இருந்தாலும், உங்களுக்கு ஒட்டு போடுவதில் ஒரு தயக்கம் உள்ளது.

    அது என்னவென்றால் நீங்கள் ஜெயித்து வந்தால் உங்கள் கழக உடன்பிறப்புகளின் கரைவேட்டி அட்டகாசங்கள் மீண்டும் துவங்கிவிடும் என்பதுதான்.

    நகரம், ஒன்றியம், கிளை என்று ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள உங்கள் அடிப்பொடிகள் அடித்த அடாவடிகள் திரும்ப யாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

    அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பது; புறம்போக்கு இடத்தை ஆட்டையை போடுவது; அரசு அலுவகங்களில் அடாவடி செய்வது; ரவுடிகள் கூட்டத்தோடு வந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது; சொந்த தெரு மக்களுக்கே கட்டிங் கொடுத்தால் மட்டும் வேலை செய்து கொடுப்பது, என பல..!

    கஞ்சி போட்ட சொக்காயை அணிந்து, பாக்கெட்டில் உங்கள் படத்தை போட்டு கொண்டு உங்களின் உடன்பிறப்புகள் இவர்கள் விதைத்த இந்த துன்பங்கள்தான், மக்களிடையே வெறுப்பாக மாறி, கடந்த இரண்டு தேர்தல்களிலும் எங்களை போன்ற சாமானியர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்காமல் செய்தது. எனக்கு தெரிந்த நிறைய பேர் இதனாலேயே உங்கள் கட்சிக்கு ஓட்டு போடுவதில்லை. என்னுடைய கணக்குப்படி சுமார் 10% சதம் வாக்காளர்கள் என்னை போன்று உள்ளனர். இங்கேதான் என்னுடைய வேண்டுகோள்.

    நீங்கள் பின்வருவனவற்றை செய்வீர்கள் என உறுதியளித்தால், நான் உங்களுக்கு ஒட்டு போட ரெடி! நீங்கள் இதை செய்தால் இந்த பத்து சதத்தில் குறைந்தது மூன்றாவது உங்களுக்கு உறுதியாகும். அது கிடைக்கும் பட்சத்தில் உங்கள் வெற்றியை அமித்ஷா வேலைகளையும் தாண்டி உறுதிப்படுத்தும்.

    அப்படி என்ன கேட்கிறோம்?

    1. உங்களின் உள்ளூர் நிர்வாகிகள் உங்கள் போட்டோவை பாக்கெட்டிலும், வண்டியிலும் வைப்பதை தடை செய்யுங்கள்.

    2. கட்சி நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகாரளிக்க தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்துங்கள்.

    3. மக்கள் பிரதிநிதியாக பதவி கிடைப்பவர்கள் வருடம் ஒருமுறை தங்களின் சொத்துப்பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யுங்கள்.

    4. புறம்போக்கு நிலங்களை வளைத்தவர்களை உடனடியாக நீக்குவோம் என விதி கொண்டு வாருங்கள்.

    5. அரசு அலுவலகத்திற்கோ பொது இடங்களுக்கோ கூட்டத்தை திரட்டி கொண்டு போக கூடாது என விதி கொண்டு வாருங்கள்.

    6. காவல்துறைக்கும் கட்சி நபர்களுக்கும் மறைமுக கூட்டணி இருக்கும் உண்மை தெரிந்தால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுங்கள்.

    என்னதான் குறைகள் இருந்தாலும், ஜெயலலிதா அம்மையாரை மக்கள் ஆதரிக்க ஒரு பெரிய காரணம்- உள்ளூர் நிர்வாகிகள் ஆடாமல் அவர் கட்டுப்படுத்தியதுதான். கெஜ்ரிவால் அலையாக ஜெயிக்க காரணமும் உள்ளூர் நிர்வாகிகளை கஞ்சி போட்ட கழிசடைகளாக இல்லாமல், பந்தா இல்லாத மக்கள் சேவர்களாக அறிமுகப்படுத்தியதுதான்.

    இந்த தேர்தலிலும் தோற்றால் உங்கள் கட்சியையும், தலைமையும் சின்னாபின்னமாக்கி கடைசி அத்தியாயம் எழுதிவிடுவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆகவே உங்கள் வெற்றிக்கு எதிரி உங்களின் கரைவேட்டி கலாச்சாரம் என்பதை மனதில்கொண்டு கடும் சீர்திருத்தத்தில் இறங்குங்கள். முதலில்
    இதை செய்வோம் என பகிரங்கமாக சொல்லுங்கள். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுங்கள்.

    நாங்கள் ஆதரவளிக்க தயார்!! செய்வீர்களா??

    - சாமானியன்

    ReplyDelete