Thursday, March 18, 2021

முட்டாளென்று சொல்லி முட்டாளானவர்

 


இன்று எங்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டி எல்.ஐ.சி பங்கு விற்பனையை இந்தியா நிராகரிக்கிறது என்று ட்விட்டரில்

#IndiaRejectsLICIPO 

என்ற முழக்கத்தை எடுத்துச் சென்றோம். 

அது ட்ரெண்டிங் ஆனது.

அதிலே சங்கிகளுக்கு கடுப்பு போல.

ஒரு சங்கியின் எதிர்வினையை எங்கள் இணைச்செயலாளர் தோழர் வைத்திலிங்கம் அனுப்பி வைத்தார்.

அந்த நபரின் ட்விட்டர் பக்கம் சென்றேன். 

"யார் இதை ட்ரெண்டிங் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்.ஐ.சி பங்கு விற்பனையை முட்டாள்கள்தான் எதிர்ப்பார்கள்"

என்று எழுதியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

நாங்கள் ட்ரெண்டிங்காக்கிய அதே

#IndiaRejectsLICIPO  முழக்கத்தை போட்டு முடித்து விட்டார். 



அதற்கு இன்னொரு சங்கி ஏதோதோ புரியாத இந்தி வார்த்தைகளில் எங்களை  திட்டி அவரும்  #IndiaRejectsLICIPO  என்றே போட்டு முடித்து விட்டார்.

அவர்கள் போட்ட #IndiaRejectsLICIPO  மும் எங்கள் கணக்கில் சேரும் என்று கூட தெரியாமல் சங்கிகளுக்கான இலக்கணமான முட்டாள்தனத்தை நிரூபித்து விட்டார்கள்.

எங்கள் இயக்கத்தை ஆதரித்ததற்கு நன்றி என்ற ஒரு கமெண்ட் போட்டு விட்டு அமைதியாக திரும்பி விட்டேன்


No comments:

Post a Comment