Friday, March 19, 2021

ட்ரம்ப் மோடி - நெனச்சேன் சிரிச்சேன்

 


கீழே உள்ள படத்தை முதலில் பாருங்கள்


உலகப் புகழ் பெற்ற லண்டன் மேடம் துஸாத் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தின் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் கிளையில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மெழுகுச்சிலை.

இது நாள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இச்சிலை அகற்றப்பட்டு ஒரு  மூலையில் தூக்கிப் போட்டு விட்டார்கள். (சங்கிகள் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு செய்தது போல)

என்ன காரணம்?

மியூசியத்துக்கு வரும் பார்வையாளர்கள் எல்லாம் ட்ரம்பின் மெழுகுச்சிலையின் முகத்திலேயே குத்து விடுகிறார்களாம்.  அதனால் அச்சிலையை அகற்றி விடுகிறார்கள்.

தகவலுக்கு நன்றி தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்.

மோடிஜிக்கு புதுடெல்லி, சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் என்று நான்கு இடங்களில் மெழுகுச்சிலை உள்ளதாம். மோடி முன்னாள் பிரதமரான பின்பு அவரது சிலையின் கதி என்ன ஆகும் என்று நெனச்சேன், சிரிச்சேன். 

No comments:

Post a Comment