Thursday, March 11, 2021

மோடியாலும் ஜெமோவோடு மோத முடியாது (பொய்களில்)

 


ஜெமோ – தமிழின் முதன்மையான பொய்யர்

 தன்னை தமிழின் முதன்மையான எழுத்தாளர் என்று ஜெமோ சுய தம்பட்டம் அடித்துக் கொள்வார்.

 ஆனால்

 அவர்தான் தமிழின், ஏன் உலகின் முதன்மையான பொய்யர்.

 அவர் ஒரு ‘எச்ச பொறுக்கி” என்ற சங்கியின் வசைக்கு பதிலேதும் சொல்லாமல் இடதுசாரிகளை திட்டுகிறார்.

 அந்த பதிவிலேயே தோழர் தமிழ்நதியை பெயர் குறிப்பிடாமல் சொல்வதை படியுங்கள்.

 


"அவரைப் பற்றியோ, அவரது நாவல் பற்றியோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. ஆனாலும் அவரை நான் கடுமையாக விமர்சிப்பதாக கற்பனையாக நினைத்துக் கொள்கிறார்" என்று இங்கே சொல்கிறார்.

 ஜெயமோகனுக்கு வயதாகி விட்டது போல. ஏற்கனவே மத வெறி, தற்பெருமை, அடுத்தவரை அதிலும் குறிப்பாக இறந்த பின் இகழ்தல் ஆகிய நோய்களால் அவதிப்படுபவருக்கு ஞாபக மறதி நோய் கூட வந்து விட்டது போல.

 விகடன் “தடம்” ஆகஸ்ட் 2016  இதழுக்கு அவர் அளித்த நேர்காணலை படியுங்கள்.

 


இதிலே தமிழ்நதி ஒன்றும் முக்கியமான எழுத்தாளர் என்று அவரை “ஜஸ்ட் லைக் தட்’ நிராகரிக்கிறார்.

 அடுத்து அவரது இணைய தளத்தின் மார்ச் 2019 பதிவையும் படியுங்கள். அது தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம் நாவலைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் படியுங்கள்.

 


ஆனால் இப்போதோ அந்த பெண்மணி குறித்து நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பசப்புகிறார்.

 இது முதல் முறை அல்ல.

 தோழர் சோலை சுந்தரப் பெருமாள் மற்றும் தோழர் டி.செல்வராஜ் ஆகியோரின் எழுத்துக்கள் எல்லாம் பொருட்படுத்தத்தக்கது அல்ல என்பதால் நான் அவர்கள் எழுதியதையெல்லாம் படித்ததே இல்லை என்று சொன்ன பொய்யை இவர்களின் படைப்புக்கள் பற்றி படு மோசமாக எழுதியதை ஸ்க்ரீன் ஷாட்டுடன் முன்னர்  நான் அம்பலப்படுத்திருந்தேன்.

 இந்த பொய்கள் எல்லாம் புதிதல்ல. காலம் காலமாக அவர் சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.

 எழுதுபவர்களையும் வாசகர்களையும் அவர் எப்படி கனிவோடு மதிக்கிறார் என்று சொல்வதையும் படியுங்கள்.

 


சில மாதங்கள் முன்பாகத்தான் தோழர் ஆதவன் தீட்சண்யாவை இவர் முச்சந்தி எழுத்தாளர் என்று வசை பாடியிருந்தார். அது சரியா என்றும் அப்படி முத்திரை குத்த இவர் யார் என்று கேட்டதற்கு இவரது முதன்மை குண்டர் லச்சூ வெறி பிடித்து ஆடியதையும் நான் இன்னும் மறந்திடவில்லை.

 இப்போது எப்படி கதை விடுகிறார் பாருங்கள்.

 பொய் சொல்வதில் போட்டி வைத்தால் மோடியையும் ஜெயிக்கக் கூடிய வல்லமை படைத்தவர் புமா ஆஜான் ஜெமோ மட்டுமே . . . .

No comments:

Post a Comment