காரியமாகும் வரை காலைப் பிடிப்பார்கள்.
காரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடிப்பார்கள்.சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, December 31, 2020
ரஜினிக்கு இது தேவைதான்.
மோடி எனும் போலிக்கு பொருத்தமாக
போலி தாகூருக்கு பொருத்தமாக
“Where the mind is without fear and
Where the head is
held high
என்று தொடங்கும் தாகூரின் கவிதையை நாம் பள்ளியில் படிக்கையில்
பாடமாக படித்துள்ளோம். மேற்கு
வங்கத்திற்கு செல்கையில் தாகூர் போல தன்னைக் காண்பித்துக் கொண்ட உலகின் மிகச்
சிறந்த நடிகருக்காக யாரோ ஒருவர் தாகூர் கவிதையை மாற்றி எழுதியதை வாட்ஸப்பில்
பார்த்தேன்.
Where the mind is without wisdom
And the face is eternally turned towards the camera
Where knowledge is commodified;
Where the world has been broken up into fragments by narrow
domestic walls;
Where words come out from the depth of the IT cell
Where tireless PR stretches its arms towards total
obfuscation
Where the clear stream of reason has lost its way
Into that land of bondage, mein Fuehrer,
You have let this country sink.
#FakeTagore
எங்கே மனதில் ஞானமில்லையோ,
எங்கே முகம் நிரந்தரமாக காமெராவை நோக்கி மட்டுமே திரும்பியுள்ளதோ,
எங்கே அறிவு விற்பனைப் பொருளாகியுள்ளதோ
எங்கே குறுகிய பார்வைகளால் உலகம் பல துண்டுகளால் உடைக்கப்பட்டுள்ளதோ,
எங்கே வார்த்தைகள் தகவல் தொழில் நுட்பக் குழு தயாரித்தது மட்டுமாகவே வெளி வருகிறதோ,
எங்கே ஓய்வில்லா விளம்பர நடவடிக்கைகள் முழுமையான குழப்பத்திற்கு மட்டும் இட்டுசெல்கிறதோ,
எங்கே தெளிவான சிந்தனை என்பது அடிமைத்தனம் மேலோங்கியுள்ள மண்ணில் தன் வழியை இழந்து விட்டதோ,
அப்படியாக, புதிய ஹிட்லரே,
நீ இந்த தேசத்தையே அழித்து விட்டாய்.
Wednesday, December 30, 2020
பதுங்கு குழியில் பத்திரமாக மாலன்
யாராவது மூத்த பத்திரிக்கையாளர் மாலனை பார்த்தீங்களா?
24.12.2020 க்குப் பிறகு அவருடைய முக நூல் பக்கமும் ட்விட்டர் பக்கமும் எந்த புதிய பதிவும் இல்லாமல் இருக்கிறது.
"தினம் ஒரு கேள்வி" என்று அவர் ஆரவாரமாக ஆரம்பித்தது கூட 24.12.2020 அன்றோடு நின்று போய் விட்டது.
அவரை உசுப்பேத்த தினம் ஒரு பின்னூட்டம் போட்டாலும் மனுஷன் அசையவே இல்லை.
நேற்று போட்ட கமெண்டின் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது.
சாலமன் பாப்பையா "வாங்க பழகலாம்" என்று கூப்பிட்டது போல "வாங்க மாற்றலாம்" என்று வரவேற்றவர் ஒரு வேளை மேலே உள்ள பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டிருக்கிறாரோ?
அடுத்தவர் பதிவுகளுக்கெல்லாம் சென்று பின்னூட்டம் போடும் ஒரு மூத்த்த்த்த்த்த பத்திரிக்கையாளரை இப்படி முடக்கி வைத்த பாவம் ரஜினியையே சாரும்.
பிகு: அவரது ட்விட்டர் பக்கத்திலேயே ஒரு சங்கியோடு நடந்த சண்டை நாளை.
புரோக்கர்களுக்கு அழிவில்லை. அவருக்கும் . . .
நம்ம தரகுப்புயல் அய்யா, அரசியலிலிருந்து விலகுவதாக உணர்ச்சிக் கொந்தளிப்போடு அறிக்கை விட்டுள்ளார்.
அவரது புலம்பலை படிக்கையில் எனக்கு சிரிப்பு சிரிப்பாகவே வந்தது.
கூழாங்கல்லை இவர்தான் மாணிக்கம் என்று பில்ட் அப் கொடுத்தார். மன நோயாளி போல ரஜினி வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்ததும் இவர்தான். காமராஜர் காலடியில் இருந்தவர் என்று சொல்கிற இவர்தான் காமராஜர் வீட்டை எரித்து அவரை கொல்ல முயன்ற கூட்டம் ஆட்சிக்கு வர 2014 மக்களவைத் தேர்தலில் தரகு வேலை பார்த்தவர். காந்தியின் பெயரில் இயக்கம் வைத்துக் கொண்டே காந்தியைக் கொன்றவர்களோடு கரம் கோர்த்தார். இப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அந்த கூட்டம் கொடுத்ததுதானே!
இப்படியெல்லாம் எழுதி விட்டதால் இவர் மீண்டும் அரசியல் பக்கமே வர மாட்டார் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
"திரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று சொன்ன நாய் சேகர் போல இவரும் எண்ட் கார்டே இல்லாமல் மறுபடி அரசியலுக்கு வருவார், வேறு ஒருவருக்கு தரகு செய்ய . . .
புரோக்கர்கள் என்றும் அழிவதில்லை.
Tuesday, December 29, 2020
தரகுப்புயலைக் கவனிச்சுக்குங்க ரஜினி.
அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையை பார்த்த போதே 31.12.2020 அன்று ரஜினி அரசியல் கட்சியை அறிவிக்கப் போவதில்லை என்பது தெரிந்து போனது. இன்றைய அறிக்கை மூலம் ரஜினிகாந்த் அதனை உறுதிப்படுத்தி விட்டார்.
தயவு
செய்து தரகுப்புயல் ஐயாவை கை விட்டு விடாதீர்கள்.
டெம்போ
வைக்காமலே உங்களை அரசியலுக்கு கடத்த நினைத்தவர் அவர்!
இருபது லட்சம் அளித்தோருக்கு நன்றிகள்
நேற்று இரவு கணிணியை அணைக்கும் முன்பாகத்தான் பார்த்தேன். வலைப்பக்கத்தின் பார்வை எண்ணிக்கை "இருபது லட்சம்" என்ற மாய எண்ணிக்கையை கடந்திருந்தது.
2009 ம் வருடம் எழுதத்தொடங்கி இரண்டே பதிவுகளில் மூடி வைத்த வலைப்பக்கம், அடுத்த ஆண்டு விபத்து ஏற்பட்டு ஒரு மாத காலம் வீட்டில் முடங்கிய நேரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
நம் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான தளம் என்பதால் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் நீடிக்கிறது.
"கடை விரித்தேன், கொள்வாரில்லை" என்ற நிலை வந்திருந்தால் எத்தனையோ வலைப்பக்கங்களைப் போல இந்த பக்கமும் நின்று போயிருக்கும். அப்படியில்லாமல் தொடர்ச்சியாக வலைப்பக்கத்திற்கு வருபவர்களால்தான் வலைப்பக்கம் உயிர்ப்போடு தொடர்கிறது.
முதல் பத்து லட்சம் பார்வைகள் வர எட்டு ஆண்டுகள் ஆனது. அடுத்த பத்து லட்சம் மூன்றரை ஆண்டுகளில், அதுவும் "தமிழ்மணம்" திரட்டி இல்லாத போதும் வந்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.
இருபது லட்சம் பார்வைகளை அளித்து உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பயணம் தொடரும் இன்னும் உற்சாகமாக ....
Monday, December 28, 2020
செஞ்சுரி அடிப்பார் அர்ணாபு கோஸ்வாமி
தீக்கதிர் செய்தி கீழே உள்ளது.
செல்ஃபி சவர்க்கர், வாஜ்பாய், எச்.ராசா இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள மோடியின் செல்லப் பிராணி அர்ணாப் கோஸ்வாமி விரைவில் மன்னிப்பு கேட்பதில் சதமடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
உண்மை இல்லாத மனிதனுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. ஆகவே மன்னிப்பு கேட்பதால் அவையெல்ல்லாம் வந்து விடப் போவதில்லை.
எனவே சதம் மன்னிப்பு அவருக்கு சாத்தியமே!
வி.டி. சாவர்க்கரை பின்னுக்குத் தள்ளினார் அர்னாப் கோஸ்வாமி.. பிரிட்டிஷ் அரசிடம் 2 மாதத்தில் 280 முறை மன்னிப்பு கேட்டு சாதனை...
ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்ட சாவர்க்கர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 1911, 1913, 1921, 24 ஆகிய ஆண்டுகளில் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கெஞ்சிக் கூத்தாடி சீக்கிரத்திலேயே வெளியே வந்தார். “பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய்தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்” என்று அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை.
பின்னாளில், வாஜ்பாய் உள்ளிட்ட இந்துத்துவா வாதிகளும் இதேபோல மன்னிப்பு கேட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.தற்காலத்தில், அந்த வேலையை செய்துவருபவர் அர்னாப் கோஸ்வாமி. பாஜக ஆதரவாளரும் இந்துத்துவா ஊடகப் பேர்வழியுமான இவர், இஷ்டத்திற்கு அடுத்தவர்கள் மீது அவதூறையும் வெறுப்பையும் அள்ளி வீசுவது, பின்னர் மன்னிப்பு கேட்டு, ஜகா வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் அவர் தற்போது வி.டி. சாவர்க்கரையே விஞ்சி விட்டது தெரியவந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்தியாவிலேயே ஏராளமான அவதூறு வழக்குகள் இருந்தாலும், வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்களை பரப்பியதற்காக அண்மையில் இங்கிலாந்து நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பு, அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ. 19 லட்சத்து 73 ஆயிரம் அபராதம்விதித்தது. அத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவி-யில் தனது மன்னிப்புக் கோரலை பகிரங்கமாக ஒளிபரப்பி யுள்ளார்.
ஆனால், இம்முறையையும் சேர்த்து அர்னாப் கோஸ்வாமி இதுவரை 280 முறை இங்கிலாந்து அரசிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2020 பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 280 முறை அர்னாப் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதில், சாவர்க்கரை அர்னாப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிய சாவர்க்கருக்கு ‘வீர்’ சாவர்க்கர் என்று பட்டம் கொடுத்த மோடி அரசு, அர்னாப்பிற்கு என்ன விருது கொடுக்க உத்தேசித்துள்ளது, மகாவீர் கோஸ்வாமியா அல்லது பரம்வீர் கோஸ்வாமியா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்லடித்து வருகின்றனர்.
நல்ல வாய்ப்பு ரஜினி
மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியமைக்கு மகிழ்ச்சி ரஜினி.
மருத்துவமனை உங்களுக்கு சில அறிவுரைகளை சொல்லியுள்ளது.
ஒரு வார காலத்திற்கு படுக்கையில் இருந்தபடி முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் உடலுக்கு சிரமம் கொடுக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஓய்வெடுங்கள்.
கொரோனா கிருமியை விட மோசமான கிருமியான பாஜகவிடமிருந்தும் விலகி பாதுகாப்பாக இருக்கலாம்.
டேக் கேர் ரஜினி.
Sunday, December 27, 2020
மகிழ்ச்சியுடன் ஒரு மாற்றம்
இன்று எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முப்பத்தி மூன்றாவது மாநாடு வேலூரில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் விமரிசையாக நடந்திருக்க வேண்டிய மாநாடு கொரோனா காரணமாக, வழக்கமான நிகழ்வுகளான பிரச்சாரம், பேரணி, கலை இரவு போன்றவை இல்லாமல் ஒரு நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடாக நடந்தது.
ஆனாலும் மிகவும் முக்கியமான மாநாடு.
ஏனெனில்
இது நாள் வரை இணைச்செயலாளராக பணியாற்றி வந்த இளைய தோழர் எஸ்.குணாளன், புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
அடுத்த தலைமுறை வசம் சங்கத்தலைமை செல்வது என்பது ஆரோக்கியமான செயல்பாடுகள் நீடிக்க உதவும். அந்த முறையில் கோட்டத்தின் முதன்மைப் பொறுப்பிற்கு ஒரு இளைய தோழரை கொண்டு வர முடிந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதே போல துணைப் பொருளாளர் பொறுப்பிற்கு இன்னொரு தோழர் பி.எஸ்.பாலாஜி வந்துள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் தோழர் எஸ்.குணாளன், துணைப்பொருளாளர் தோழர் பி.எஸ்.பாலாஜி உள்ளிட்ட எங்களின் கோட்டச் செயலகத்தில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
எங்கள் கோட்டம் புதிய சிகரங்களை நோக்கி நிச்சயம் பயணிக்கும்.
பிகு: தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் கருப்பு கருணா அவர்கள் குடும்ப நல நிதியாக உதவிடுமாறு மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். சில நிமிடங்களில் ரூபாய் 8,390 நிதி கிடைக்கப்பெற்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.
மோடிக்கு செம கேள்வி
Saturday, December 26, 2020
பேரழிவு அலை
இதற்கு முன்பு கண்டதில்லை.
இனியும் காண விருப்பமில்லை.
கடலாலாலே கைவிடப்பட்டார்.
சுனாமி கொத்து கொத்தாகக் கொன்றது.
அன்று மட்டும் பேரழிவின் அடையாளமானது.
ஆழிப்பேரலையின் சீற்றத்தால் மாண்டோருக்கு
மனமார்ந்த அஞ்சலி
இன்று நாம். நாளை அவர்களும்
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த செய்தி சிலருக்கு வயிற்றெரிச்சலையும் உருவாக்கியுள்ளது. 21 வயது பெண்தான் மேயர் என்றால் வேறு யாருக்கும் தகுதியில்லையா என்பது போன்ற அபத்தமான விமர்சனங்களை பார்க்க முடிகிறது. வயதானால்தான் முதிர்ச்சி வரும் என்று சொல்லும் அதே வாய் ஒரு எழுபது வயதுக்காரருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தால் எப்படி பேசும் என்றும் நமக்கு தெரியும்.
இன்று பொறாமையில் பேசும் வாய்கள் கூட நாளை அவரது பணிகளைப் பாராட்டிப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஏனென்றால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்வு. அத்தேர்வுகள் என்றுமே சோடை போனதில்லை.
எப்போதும் அவர் எங்களோடு
எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் மறைந்து மூன்றாண்டுகள் உருண்டு விட்டன. அவர் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் ஒரு அகில இந்திய மாநாடு கூட முடிந்து விட்டது.
ஆனாலும் அவர் எப்போதும் எங்களோடே இருப்பதாக உணர்கிறோம். அவரது உரைகளும் எழுத்துக்களும் எப்போதும் எங்களை வழி நடத்தும், உற்சாகமூட்டும்.
எல்லாவற்றையும் விட அவரது மகத்தான சாதனையான "பென்ஷன்" ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ஓய்வு பெறப் போகிற எங்களைப் போன்றவர்களுக்கும் அவரின் அருகாமையை எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.
செவ்வணக்கம் தோழர் என்.எம்.எஸ்
இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்தை சுட்டிக்காட்டும் உரையின் காணொளி கீழே உள்ளது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுதான் அவர் இறுதியாக பங்கேற்ற அகில இந்திய மாநாடு. அதில் அவர் ஆற்றிய உரைதான். அவசியம் பாருங்கள்
பிகு : மேலே உள்ள படம், தோழர் என்.எம்.எஸ், எங்கள் வேலூர் கோட்ட நிகழ்வில் இறுதியாக கலந்து கொண்ட வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது எடுக்கப்பட்டது.
முகப்பில் உள்ள படமும் வேலூரில் எடுக்கப்பட்டது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 24 வது பொது மாநாடு 1996 ல் வேலூரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்டது.
Friday, December 25, 2020
யாருய்யா அந்த அருணாச்சலம்?
மக்கள் நீதி மய்யத்தோட பொதுச்செயலாளர் அங்கே இருந்து தாவி பாஜகவுக்கு தாவிட்டாருன்னு சங்கிங்க ஓவரா குதிச்சிக்கிட்டு இருக்காங்க!
குஷ்பு வந்த போது குதிச்சதிலாவது ஒரு நியாயம் இருக்கு. அவங்களை வேடிக்கை பார்ப்பதற்காவது நாலு பேர் வருவாங்க!
ஆமாம். யாருய்யா அந்த அருணாச்சலம்?
அப்படி ஒரு பெயரையே இன்னிக்குத்தான் முதல் முறையா கேள்விப் படறேன்.
போதும் இழப்புக்கள்
சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு நல்குபவர்களின் தொடர் இழப்புக்கள் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.
பேராசிரியர் தொ.ப அவர்களுக்கு அஞ்சலி
தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு
மனிதா, மனிதா
இன்று வெண்மணி தியாகிகள் தினம். இந்த வருடமும் செல்ல இயலவில்லை.
அதை ஈடு செய்யும் விதத்தில்
வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "கண் சிவந்தால் மண் சிவக்கும்" படத்தின்
"மனிதா, மனிதா, இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்"
பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.
யூட்யூப்இணைப்பு இங்கே
Thursday, December 24, 2020
அவர்தாம் பெரியார் . . .
“அறிவைத் தடுப்பாரை,
மானம் கெடுப்பாரைவேரோடு பெயர்க்க வந்த
கடப்பாரை
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரப்பை
உலகு தொழும்
மனக்குகையில்
சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்,
யார்? அவர்தாம் பெரியார்”
என்ன ஆனார் MGR?
மேலே உள்ள படம் எங்கள் புதுவை கிளை 2 ன் தோழர் எஸ்.செல்வராஜின் மகன் அனிஷ் பாரதி வரைந்தது.
எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு தன் மகன் வரைந்தது என்ற அவர் குறிப்பைப் பார்த்தவுடன்தான் இன்று எம்.ஜி.ஆர் நினைவு நாள் என்பது நினைவுக்கு வந்தது.
வழக்கமாக எனது வீட்டிலிருந்து அலுவலகம் வரும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்தது நான்கைந்து இடங்களிலாவது சின்ன ஷாமியானா போட்டு எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து ஒலி பெருக்கிகளில் அவர் பாடல்களை ஒலித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்று அப்படி எதுவும் கண்ணில் படவில்லையே, ஒரு வேளை அலுவலகம் வரும் அவசரத்தில் நாம்தான் கவனிக்கவில்லையோ என்று எண்ணி, வீடு திரும்பும் போது நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இந்த முறை எம்.ஜி.ஆர் இருந்தார். அந்த இடத்திலும் கூட எம்.ஜி.ஆர் பாட்டு இல்லை, பிள்ளையார் பாட்டுதான்.
கடந்த வருடங்களில் மற்ற இடங்களில் இருந்த எம்.ஜி.ஆர் என்ன ஆனார்?
அவர் துவக்கிய கட்சியின் இன்றைய உரிமையாளர்களின் இன்றைய பெரிய முதலாளியாக மோடி மாறி விட்டதால் எம்.ஜி.ஆர் காணாமல் போய் விட்டாரோ?
ஷேம் ஷேம் மாலன்
பாவம், மூத்த பத்திரிக்கையாளர்....
ட்விட்டரில் தினம் ஒரு கேள்வி என்று ஒரு கருத்துக் கணிப்பை தொடங்கினார்.
21 ம் தேதி ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு வந்த முடிவு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது போல.
இரண்டு நாட்களாக ஆளை அந்த பக்கம் காணவே காணோம். அடுத்த கேள்விகளும் வரவில்லை.
ஒரு வேளை உடம்பு, கிடம்பு சரியில்லையோ என்று முக நூல் பக்கம் போய்ப் பார்த்தால் மனுசன் "எருமை மேயும் சிறு வீடு" என்று திருப்பாவை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காரு.
ரொம்பவே ஷேம் ஷேம் ஆயிடுச்சா மாலன் சார்?
Wednesday, December 23, 2020
விஜய் - சீமான் என்ன பஞ்சாயத்து?
வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் பக்கத்தில் இவற்றைப் பார்த்தேன்.
ஆமாம், இது என்ன பஞ்சாயத்து?
விஜய் ரசிகர்கள் இப்படி கொந்தளிக்கிற அளவிற்கு சீமான் சொன்னது என்ன?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
Tuesday, December 22, 2020
யெட்டிக்கு கார்ப்பரேட் பாசமா? காசு வாங்கிய பாசமா?
*நாளொரு கேள்வி: 21.12.2020*