Saturday, December 8, 2018

ஜெமோவிற்கு பதில் சாரு




சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டாலே அத்துடன் ஒரு சர்ச்சையும் சேர்ந்தே வரும்.

அந்த சர்ச்சையின் ஆதாரமாக பெரும்பாலும் ஜெயமோகனே இருப்பார்.

அந்த படைப்பிலே
அழகியல் இல்லை,
உண்மையின் ஒளி இல்லை,
உப்பு இல்லை,
புளி இல்லை,
மிளகாய்த்தூள் இல்லை

என்று பக்கம் பக்கமாக எழுதுவார்.

திராட்சை கிட்டாத நரியின் புலம்பலாகவே அது இருக்கும்.

ஆனால் என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை.  இந்த முறை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்து விட்டார். இதற்கு முன்பாக வண்ணதாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். விஷ்ணுபுரம் விருது வேறு அப்போது கொடுத்ததாலோ என்னவோ, ஜெமோ தன் வழக்கமான வேலையைக் காண்பிக்கவில்லை.

ஜெயமோகன் புலம்பாவிட்டால் என்ன? அந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்று சாரு நிவேதிதா புலம்பி விட்டார்.

எஸ்.ராவுக்கு நோபல் பரிசு கொடுக்கனும், புக்கர் பரிசு கொடுக்கனும் என்று சாரு எழுதியதை புலம்பல் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?

பிகு:

தோழர் சு.வெங்கடேசனுக்கு "காவல் கோட்டம்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்த போது எஸ்.ரா அதனை "ஆயிரம் பக்க அபத்தம்" என்று வசை பாடியது, எஸ்.ராவுக்கு தோழர் சு.வெ வாழ்த்து சொன்ன போது நினைவுக்கு வரத்தான் செய்தது. 


1 comment: