Thursday, December 13, 2018

முட்டு கொடுப்போர் முட்டிக் கொள்ள . . .



ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு கீழே.

அப்படி ஒன்றும் பாஜக தோற்கவில்லை, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்று முட்டுக் கொடுப்பவர்கள், இதைப் படித்து விட்டு உண்மையை புரிந்து கொண்டு ஏதாவது கம்பத்தில் முட்டிக் கொள்ளவும்.



பிஜேபியின் சரிவும் காங்கிரசின் ஏற்றமும்:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு சதவீதம் வைத்துப் பார்க்கும்போது பிஜேபி அதிகம் இழக்கவில்லை என்று ஒரு சித்திரம் கிடைக்கிறது. ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது நிலைமை வேறாக இருக்கிறது என்று கல்கத்தாவிலிருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை கூறுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பிஜேபி 64 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது. காங்கிரஸ் 1.24 கோடி வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறது.

மோடி அலையின்போது பிஜேபி ராஜஸ்தானில் 55.61 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த சட்டப் பேரவை தேர்தலில் அது 38.80 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. அதாவது 16.81 சதவீத வாக்குகள் பிஜேபியிடமிருந்து இடம் பெயர்ந்திருக்கின்றன.

மத்தியப்பிரதேசத்தில் 2014இல் 54.76 சதவீத வாக்குகளைப் பெற்ற பிஜேபி இந்த தேர்தலில் 41 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது
சத்தீஸ்கரில் 49.66 சதவீதம் பெற்ற பிஜேபி இப்போது 33 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது.

இதனால் பலன் பெற்றது காங்கிரஸ்தான். 2014இல் ராஜஸ்தானில் 30.73 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 39.3 சதவீதம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இது 35.35%இலிருந்து 40.90% ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கரில் 39.09 இலிருந்து 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
(
ஆதாரம்: தி டெலிகிராஃப், டிசம்பர் 13, 2018)


No comments:

Post a Comment