ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறிக்கு எதிராக பிரம்மாண்டப் போர்
- கே.சண்முகம்
“நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல” என்ற ஆவேச முழக்கத்துடன் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் 2019 ஜனவரி 1 புத்தாண்டு அன்று, பழமைவாதிகளுக்கு எதிராக ‘வனிதா மதில்’ என மலையாளத்தில் கூறப்படும் “பெண்கள் சுவர்” அமைக்க உள்ளனர். மனிதச் சங்கிலி என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது அமைய இருப்பது ‘பெண்கள் சுவர்’ பிரம்மாண்டமான மதில். பொதுவாக கொடிய விலங்குகள், திருடர்கள் உள்ளே புகாமல் பாதுகாக்கவே சுவர் அமைக்கப்படுகிறது. அதைப் போலவே முற்போக்கு மறுமலர்ச்சி அடைந்துள்ள கேரளாவை நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்க முயற்சிக்கும் சாதி மதப் பழமைவாதிகள் மீண்டும் புகுந்து விடாமல் தடுப்பதற்கே இந்தச் சுவரை எழுப்புகிறார்கள் கேரளப் பெண்கள்.
காலங்காலமாக பெண்களுக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்தை வலுப்பெறச் செய்யும் இழி சிந்தனை கொண்டவர்கள், பிஜேபி, சங் பரிவாரக் கும்பலின் தலைமையில் கேரளாவில் மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில், அவர்களுக்கு எதிராக வலுவான சித்தாந்த ரீதியாக நடைபெறும் இவ்வியக்கம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகிறது. இதே கேரளாவில் தான் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை சமூக சீர்திருத்தவாதிகளின் தலைமையில் பெண்கள் அடித்து நொறுக்கினார்கள். பெண்களின் மார்பகங்களுக்கு வரி விதித்த அயோக்கிய ஆண்டைகளுக்கு எதிராக தனது மார்பகத்தையே வெட்டி வீசிய வீர மங்கைகளின் முற்போக்குக் கேரள மண்ணில் மீண்டும் இதுபோன்ற சனாதனவாதிகளையும், மதவெறியர்களையும் வளர விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பிரம்மாண்டமான பெண்கள் சுவர் கம்பீரமாக எழ இருக்கிறது
ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்,“சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, பக்தி, ஆசாரம் என பொய்க்காரணம் கூறி பிஜேபி – சங் பரிவார கும்பல்கள் மனித நாகரீகமற்ற முறையில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்துக்களை மத ரீதியாக அணி திரட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்ற இவர்களின் கீழ்த்தரமான நோக்கமும், அதற்காக அவர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட்டுகளின் கையில் காவல்துறை இருந்தால்…
சபரிமலைப் பிரச்சனையில் வெகுமக்களின் ஆதரவைப் பெறாத பாஜக கும்பலின் இப்போராட்டத்தைக் கேரள இடது முன்னணி அரசு திறம்படக் கையாண்டு வருகிறது. அவதூறு பிரச்சாரம் செய்து வரும் கும்பல்களுக்கு கேரள முதல்வர் திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு விசயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னால் மட்டும் பல லட்சம் பெண்கள் அணி திரண்டுள்ளார்கள். இது போக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் பின்னால் லட்சக்கணக்கான பெண்கள் அணி திரண்டுள்ளனர். அவர்களில் ஒருவரைக் கூட சபரிமலைக்குச் செல்லுங்கள் என்று அரசு கூறவில்லை. காரணம் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சனையில் கேரள அரசு மிகுந்த அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருகிறது. அதே நேரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் பெண்கள் எவராவது சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகிறது என்பதுதான்.
சபரிமலையில் பெரிய அளவில் கலவரத்தைத் தூண்டி ரத்த ஆறு ஓடச் செய்யப் பல வழிகளிலும் முயற்சிக்கும் பிஜேபி, சங் பரிவாரக் கும்பலைக் காவல் துறையினர் மிகுந்த லாவகத்தோடு கையாண்டு வருகின்றனர். குறிப்பாக காவல்துறை கண்காணிப்பாளர் யதிஷ் சந்திரா ஐபிஎஸ் இப்போது இளைஞர்களின் ஹீரோவாகவே மாறிவிட்டார். அவரைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் குறைவு. கம்யூனிஸ்ட்டுகளின் கையில் காவல்துறை இருந்தால் எப்படிச் செயல்படும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக கேரள காவல்துறையினரின் நடவடிக்கைகள் உள்ளது.
கேரள முதல்வரின் சீரிய முடிவு
இச்சூழலில் தான் சித்தாந்த ரீதியாக மக்களைத் திரட்ட“முற்போக்கு மறுமலர்ச்சி கேரளத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்ற முழக்கத்தோடு கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக மாற்றத்திற்காகப் போராடிய அமைப்புகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்து எழுச்சிமிகு கூட்டத்தைக் கூட்டினார். இது மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்,இடது ஜனநாயக முன்னணி கட்சிகளுடன் 197 அமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் தான் ‘பெண்கள் சுவர்’ அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
வனிதா மதிலுக்கு வரவேற்பு
மக்கள் செல்வாக்குள்ள ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன அமைப்பின் (எஸ்.என்.டி.பி) தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசன், பெண்கள் சுவர் நிகழ்வின் கன்வீனராகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் முக்கிய விசயம் என்னவென்றால் இவர் சமீப காலம் வரை பிஜேபியோடு நெருக்கமாக இருந்தவர். சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சனையில் பிஜேபி,சங் பரிவாரத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து, முற்போக்கு சமூக நீதிக்காகப் போராடிய ஸ்ரீ நாராயண குரு வழியில் செல்லும் தங்கள் அமைப்பு பிஜேபி, சங்பரிவாரக் கும்பலின் பிற்போக்குத்தன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று கூறியே பிஜேபியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிஜேபிக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. இவரையும் வசைபாடத் துவங்கினார்கள்.
இந்நிலையில் பெண்கள் சுவருக்குத் திட்டமிட்டவர்கள் கூட எதிர்பாராத வகையில் கேரளா முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள், இது தங்களின் உரிமையை மீட்கும் போராட்டம் என உணர்ந்து தாங்களாகவே பெண்கள் சுவருக்கு ஆதரவாக களத்தில் திரண்டு வருகிறார்கள். இது இவர்களை எதிர்ப்பவர்களுக்குப் அச்சத்தைக் கொடுத்துள்ளது. காரணம் இந்தச் சுவர் தங்களின் பழமைவாத பெண்ணடிமைத்தன, மதவெறி சிந்தனைகள் மீது விழுந்து நொறுக்கி விடும் என்ற பயத்திலும், உலகமே பேசப் போகும் சாதனையாக இது அமையப் போவதை நினைத்து எரிச்சலிலும், பிஜேபி,சங் பரிவார் கூட்டமும், காங்கிரசும், என்.எஸ்.எஸ். என்ற சாதிய அமைப்பும் இந்நிகழ்வை வலுவாக எதிர்ப்பதோடு, தங்களால் முடிந்த அளவு கொச்சைப்படுத்தியும், அவதூறு பரப்பியும் வருகிறார்கள்.
முற்போக்குத் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ‘பெண்கள் சுவர்’
மிக முக்கியமான மூன்று கோசங்களை மட்டும் முன்னிறுத்தியே பெண்கள் சுவர் எழுப்பப்படுகிறது.
1. கேரளாவைப் பைத்தியக்காரர்களின் நாடாக மாற்ற அனுமதியோம்.
2. முற்போக்குக் கேரள மரபுகளை தகர்த்திட அனுமதியோம்.
3. ஆண்-பெண் பாலின சமத்துவத்தை உத்திரவாதப்படுத்துவோம்.
- இந்த முழக்கங்கள் கேரளா முழுவதும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “பெண்கள் சுவர்”நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறப் போகிறது. கேரளாவின் கடைசி எல்லையான காசர்கோடு முதல், தலைநகர் திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 620 கிலோ மீட்டர் நீளத்துக்கு பெண்கள் சுவர் அமைய உள்ளது. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்பர். இந்தப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பெண்கள் சுவருக்கு அணி வகுக்கப்போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக வரும் ஆண்கள் எதிர்புறம் நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இயக்கங்களின் 30 லட்சம் பெண்கள் இச்சுவரில் இணைய உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 50 லட்சத்துக்கும் மேல் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சுவர் அமைப்பதற்காக வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கோழிக்கோட்டிலும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் ஆலுவாவிலும்,கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஆலப்புழையிலும் பெண்கள் சுவரில் இணைகிறார்கள்.
பிரமிக்கச் செய்யும் விரிவான ஏற்பாடுகள்
கேரளா முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் துவங்கி வார்டுகள் வரை சிறப்பான விளம்பரங்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகள், பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. டிச.10 அன்று ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் 15,000 மையங்களில் “பெண்கள் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.முதலில் 30 லட்சம் வீடுகளைப் பெண்கள் குழுக்கள் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்கள். மீதமுள்ள 40 லட்சம் வீடுகளையும் டிச.27ம் தேதிக்குள் சந்தித்து முடிக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.2000 நடைபயணப் பிரச்சாரப் பேரணிகள் 2000 மையங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
25,000 ஸ்குவாடுகள் (குழுக்கள்) வெகுஜன அமைப்புகளைச் சார்ந்த பெண்களையும், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களையும், பல்வேறு அரசு, தனியார் நிறுவன பெண் ஊழியர்களையும் இணைத்து பெண்கள் சுவர் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து வீடுகளிலும் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் முற்போக்கு தீபங்கள் ஏற்றப்பட உள்ளது.கல்லூரி வளாகங்களில் மாணவ-மாணவியரிடையே பெண்கள் சுவர் நிகழ்வு மிகுந்த எழுச்சியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மாணவிகள் மிகுந்த ஆவேசத்தோடு களத்தில் இறங்கியுள்ளார்கள். தொடர் ஓட்டங்கள், கலை நிகழ்வு, மனிதச் சங்கிலி, பொது இடங்களில் பெரிய திரைகளில் கையொப்பம் பதிவது, ஓவியப்போட்டிகள் என பல வடிவங்களில் உணர்ச்சி மிகு பணியைச் செய்து வருகின்றனர்.மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து “யுவஜன சங்கமம்” மூலம் பெண்கள் சுவருக்கு ஆதரவாகப் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.
தொழிற்சங்கத்தைச் சார்ந்த பெண்கள், உழைக்கும் பெண்கள், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், சிறுபான்மையினர் - பெரும்பான்மையினர் என்ற பேதமின்றி லட்சக்கணக்கானோர் பெண்கள் சுவரில் இணைய உள்ளனர்.பெண்களுக்கு சனாதனவாதிகளால் இழைக்கப்பட்டக் கொடுமைகளை ஆங்காங்கே கலை நயத்துடன் சிலைகளாகவும், சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் காட்சிக்கு வைத்துள்ளார்கள். இதில் ஒற்றை மார்பை அறுத்து எறிந்த படி நிற்கும் வீர மங்கை நங்கேலியின் முழு உருவச் சிலை அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்துகிறது.
எழுச்சிமிகு பாடல் குறுந்தகடு
“தாழ்ந்தவர்களல்ல நாங்கள் … அசுத்தமானவர்களல்ல நாங்கள்” என்ற பாடலும்,“எத்தனையெத்தனை சுவர்களைத் தகர்த்தெறிந்த நாங்கள் …எத்தனையெத்தனை கதிர்களை அறுத்தெறிந்த நாங்கள்” என்பது போன்ற உணர்ச்சி மிகு பாடல்களின் குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. கேட்போரை உத்வேகப்படுத்தும் இப்பாடல்கள் கேரளா முழுவதும் கம்பீரமாக ஒலிக்கிறது.
நிக் உட் வருகை
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பத்திரிகையாளரும், புகைப்படக் கலைஞருமான நிக் உட் (Nick Ut)“நானும் உங்களோடிருக்கிறேன்” என்ற முழக்கத்தோடு பெண்கள் சுவரை வாழ்த்த வருகிறார்.இவர் வியட்நாம் யுத்த களத்தில் பத்திரிகையாளராகச் செயல்பட்ட போது 1972 ஜூன் 8 ம் தேதி வியட்நாமில் கொடிய நாபாம் குண்டுவீசப்பட்டது. இதன் வெப்பம் தாங்க முடியாமல் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்டோர் ஆடை இழந்து ஓடி வரும் புகைப்படம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படத்தை எடுத்த இவருக்கு உயரிய “புலிட்சர்” விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசியத் தலைவர்கள் வருகை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான பிருந்தா காரத் திருவனந்தபுரத்திலும், சுபாஷினி அலி எர்ணாகுளத்திலும், ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மலப்புறத்திலும் பங்கேற்கிறார்கள். பல்வேறு பெண்கள் அமைப்புகளின் மாநில, தேசியத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
எதிர்க்கும் கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்
இந்த பெண்கள் சுவரைத் தகர்த்திட பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. அவர்களோடு காங்கிரசும் கை கோர்த்து பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். காங்கிரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் பெண்கள் சுவரை “சாதிச் சுவர்” என்று கொச்சைப்படுத்தி வரும் சூழலில் பல காங்கிரஸ், பிஜேபி தலைவர்கள் அக்கட்சிகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். பலர் கட்சித் தலைமைக்கு எதிராகக் களத்தில் இறங்கியுள்ளார்கள்.
இவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், தலித் பெடரேஷன் மாநிலத் தலைவருமான ராமபத்ரன் கூறுகையில், “முற்போக்கு மறுமலர்ச்சி கேரளாவை வலுப்படுத்தும் பெண்கள் சுவரில் தலித் பெடரேஷனைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். எங்களால் இதிலிருந்து விலகி நிற்க முடியாது.இதில் பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி விடுவோம் என்ற மிரட்டல்கள் என்னிடம் வேண்டாம். சபரிமலைப் பிரச்சனையைச் சொல்லி மத வெறியர்களின் வெறியாட்டத்தை உணர்வுப்பூர்வமாக தடுப்பதற்காகவே முதல்வர் பினராயி விஜயன் அனைத்து முற்போக்கு சக்திகளையும் அழைத்தார். பெண்கள் சுவரில் பங்கேற்கும் அமைப்புகளை சாதி அமைப்புகள் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறதா என்பதை தைரியமிருந்தால் வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார். மேலும் அவர், “இந்த பெண்கள் சுவருக்கு பெருகி வரும் ஆதரவைப் பார்த்தால் ஒரு கோடிப் பெண்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இது கேரளாவில் மட்டுமல்ல... இந்தியாவில் மட்டுமல்ல...உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்களின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்” என்றும் கூறினார்.
பெருகி வரும் ஆதரவு
ஆர்ச் பிஷப் கார்டினல் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் இவ்வியக்கத்தில் தாங்களும் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதைப் போல மேலும் பல அமைப்புகளும் இதில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. எல்லா மதத்தில் உள்ள பெண்களும், அனைத்து சமுதாயங்களில் உள்ள பெண்களும், தங்கள் விடுதலைக்கான போராட்டம் இது என்பதை உணர்ந்து இவ்வியக்கத்தில் கலந்து கொள்ள தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தவரும் சேர்ந்து மதச் சார்பற்ற தன்மையையும், பெண்களின் உரிமையையும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க உள்ளனர்.
கேரள முதல்வரின் சூளுரை
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறம்போது,“முற்போக்கு மறுமலர்ச்சி கேரளாவை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் அனைத்து சக்திகளும் இவ்வியக்கத்தில் இணைய வேண்டும். பல அமைப்புகளில் உள்ள பெண்கள், பெண்களின் சமத்துவத்திற்காக நடைபெறும் இப்போராட்டத்தில் பங்கேற்க சாதி-மத வேறுபாடின்றி தாங்களாகவே பெரிய அளவில் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பெண்கள் சுவரை எதிர்ப்பவர்களுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த பயத்திலிருந்து உருவாவதே பொய்ப் பிரச்சாரங்களும், தரக்குறைவான வார்த்தைகளும். பெண்கள் சுவர் பெண்களுக்கு மட்டுமானது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
பெண்கள் சுவருக்காக அரசின் கஜானாவிலிருந்து பணம் வாரி இறைக்கப்படுகிறது என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்படுகிறது. ஆனால் இதற்காக ஒரு ரூபாய் கூட அரசு செலவிடவில்லை என்பதே உண்மை. இதை நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தியுள்ளோம். தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருந்தால் கொஞ்ச பேர்களாவது நம்பி வராமல் இருந்து விடுவார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறப் போவதில்லை. இவர்களின் எதிர்ப்பிலிருந்தே இவ்வியக்கம் மாபெரும் வெற்றியடையப் போகிறது என்று உறுதியாகியுள்ளது”என்றார். கேரள முற்போக்கு வரலாற்றில், தற்போது நடைபெற இருக்கும் ‘வனிதா மதில்’ - “பெண்கள் சுவர்” பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
கட்டுரையாளர்: தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்.
தகவல் உதவி: தேசாபிமானி, கைரளி பீப்பிள் டிவி
நன்றி - தீக்கதிர் 31.12.2018
நன்றி - தீக்கதிர் 31.12.2018
ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறிக்கு எதிராக பிரம்மாண்டப் போர்--------> வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதீர் மேன்மக்களே. தகர டப்பா கும்பல் நாட்டுக்கு எதிரான குற்றப்பரம்பரை. ஆதாயம் என்றால் அமெரிக்காகாரனுக்கும் கழுவி விடும் கயவர்கள். பாலியல் பலாத்கார வல்லுனர்களுடன் (பாதிரிகள்) ஒட்டிய உறவு கொண்ட காம ரேட்டுகள். பிணநாரியின் அட்டூழியம் அடக்கப்படும். ரத்த வெறி அர்பன் நக்சல் பொறுக்கிகள், சீனக் கைக்கூலி அடிமைகளின் பரிவாரங்கள் அழிக்கப்படும்
ReplyDeleteஎன்ன பொறுக்கி, ஆங்கிலம் மறந்து விட்டதா? அவ்வளவுதான் கற்றுக் க்ஒடுத்தார்களா காவிக் கயவர்கள்? ஆமாம் ஆன்லைன் வேண்டுகோள் வைத்துள்ள உங்களை இன்டெர்நெட் பிச்சைக்காரர்கள் என்று அழைக்கலாம் அல்லவா? சீனா, அமெரிக்கா என்று எல்லோரிடமும் எலும்புத்துண்டுகளை பொறுக்கித் தின்னும் நாய்கள் எங்களைப் பற்றி பேசக் கூடாது
Delete