கஜா புயல் சேதங்களைப் பார்க்க மோடி ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு எச்.ராசா உண்மையான பதிலை சொல்லியுள்ளார்.
"தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஒன்றும் மோடி பிரதமராகவில்லை"
என்பது அந்த பதில்.
ஆம் தமிழக மக்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை. மதவெறியைத் தூண்டியதால் கன்னியாகுமரியிலும் ஜாதி வெறியைத் தூண்டியதால் தர்மபுரியிலும் வென்றார்களே தவிர மீதமுள்ள 37 தொகுதிகளில் மோடிக்கு ஆதரவான வாக்குகள் விழவில்லை என்பது உண்மை.
தமிழக மக்கள் வாக்களிக்காத காரணத்தால் அவர்கள் இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் தமிழகத்தையும் உள்ளடக்கிய இந்தியாவின் பிரதமருக்கு இல்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரே சொல்லி விட்டார்.
தமிழகத்திற்கு பாஜக தலைமையிலான மத்தியரசு எந்த உதவியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றால் தமிழகத்தில் அந்த கட்சி செயல்பட வேண்டிய அவசியம் என்ன உள்ளது?
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக மோடியோ, பாரதீய ஜனதாவோ கருதவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக சொன்னதற்கு எச்.ராசாவை பாராட்ட வேண்டும்.
காவிரி தொடங்கி கஜா வரை
எட்டு வழிச்சாலை முதல் ஸ்டெரிலைட் வரை
தமிழக மக்களுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுவதன் காரணம், மோடி தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக பார்க்கவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ராசா அளித்து விட்டார்.
நாங்கள்தான் தேசியவாதிகள் என்று எப்போதும் பிதற்றிக் கொண்டிருக்கிற ஆங்கில அனாமதேயங்கள் பின்னூட்டம் இட ஆவலுடன் காத்திருக்கிறேன், பிய்ந்து போன செருப்புடன்.
ஆவலுடன் காத்திருக்கிறேன், பிய்ந்து போன செருப்புடன். ***** உண்டியல் குலுக்கும் தேசவிரோத சண்டியர் கும்பலுக்கு வாக்காளர்கள் கொடுத்த செருப்படி இன்னும் மறக்கவில்லை. பலமுறை ஆப்பு அடித்த பின்பும் திருந்தாத, வெட்கமற்ற ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
ReplyDeleteஎன்னடா, தமிழில எழுத ஆரம்பிச்சிட்ட? இதுக்கு மேல இங்கிலிஷ் தெரியாதா? ஆமாம் முதலாளிகளிடம் எலும்புத்துண்டுகள் வாங்கும் நாய்கள் எல்லாம் உண்டியல் குலுக்குவது பற்றி பேசக்கூடாது
Delete