Monday, December 24, 2018

ரீசார்ஜ் பயணம் இன்று . . .



நாளை வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

செங்கொடியின் கீழ் அணி வகுத்து உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் நிலப் பிரபுக்களின் கொடூரச் செயலால் உயிர்த்தியாகம் செய்து வர்க்கப் போரின் விதையாக மாறிய கீழ்வெண்மணி தியாகிகளின் ஐம்பதாவது நினைவு தினம்.

ஆண்டுகள் ஐம்பது கடந்திருக்கிறது.

அன்றிருந்தவர்கள் பலர் இன்றில்லை. வெண்மணிப் போரின் நேரடி சாட்சியமாக இருந்த பலர் இப்போது உயிரோடு இல்லை. தலைமுறைகள் புதிதாய் தோன்றியுள்ளது.

ஆனாலும் தலைமுறைகள் கடந்து உழைப்பாளி மக்கள் வெண்மணி நோக்கி ஒவ்வொரு ஆண்டும் அலையலையாய் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மகத்தான தியாக வரலாற்றை எதிர்காலத்திற்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 

2004 தொடங்கி தொடர்ச்சியாக வெண்மணி சென்று கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நமக்கு எழுச்சி கொடுக்கவும் நம் போராட்ட உணர்வை உறுதிப் படுத்தவும் வெண்மணி தவறியதே இல்லை.

பத்தடிக்கு பத்தடி கொண்ட ராமையாவின் குடிசையில் உயிரோடு கொளுத்தப்பட்டவர்கள், "உழைக்கும் வர்க்கத்திற்கு என்ன செய்து விட்டாய்? இனி என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்பது போலவே தோன்றும்.

"உங்கள் தியாகத்தைத் தாண்டி வேறென்ன செய்ய முடியும்?" என்ற மானசீக உரையாடல், கொண்ட கொள்கையில் உறுதியோடு நிற்கும் மன வலிமையைத் தரும். சவால்கள் எதுவானாலும் சந்திக்கும் தைரியத்தைத் தரும்.

எதிர்காலப் பணிகளை புத்துணர்ச்சியோடு செய்வதற்கு என்னை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வதாகவே வெண்மணி பயணம் அமையும்.  வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த பயணத்திற்கு,

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு,

இதோ இந்த வருடமும் புறப்பட்டு விட்டேன்.




4 comments:

  1. வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்

    ReplyDelete
  2. வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு, இதோ இந்த வருடமும் புறப்பட்டு விட்டேன்.--> Visit will not be complete without saluting and glorifying Erode Ramasamy Naayakkan who was very 'compassionate' with the dead.

    ReplyDelete
  3. did you also perform red salute to erodu nayaakkan whose love for the dead is well documented? Will there be a honest answer to this?

    ReplyDelete
    Replies
    1. தந்தை பெரியாரோடு எங்களுக்கு உடன் பட நூறு விஷயங்கள் இருப்பது போல முரண்படவும் பத்து விஷயங்கள் உண்டு. இந்த ஒரு முரண்பாடு காரணமாக அவரது பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் காவிகளோடு உடன்பட ஒரு விஷயம் கூட கிடையாது.

      அதே போல உனக்கெல்லாம் வெண்மணி தியாகிகள் மீது எந்த அனுதாபமும் கிடையாது. பெரியாரை இழிவு படுத்துவது மட்டுமே உன் கமெண்டின் நோக்கம் என்பதும் புரியும். இதுதான் காவிகளின் இழி குணம்.

      ஏண்டா என்னிடம் நேர்மையை எதிர்பார்க்க உனக்கென்னடா அருகதை இருக்கிறது? ஒளிந்து கொள்ளும் கோழையே!

      Delete