காவிகளால்
கொல்லப்பட்ட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை “கௌரி
லங்கேஷ், தெரிவு செய்யப்பட்ட சொற்கள்” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு வெண்மணியில் வாங்கிய நூல் இது.
மொத்தம்
பத்து கட்டுரைகள் அடங்கிய நூல் இது. மோடி ஆட்சியில்
ஒடுக்கப்படும் பேச்சுரிமை, மாட்டரசியல், உ.பி தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில்
சுட்டுக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள், கால்நடை விற்பனை தடைச்சட்டத்தின் பின்னே உள்ள
பொருளாதார அரசியல், நக்ஸலைட்- சி.ஆர்.பி.ஃஎப் மோதல்கள், பெரும் தெய்வங்களை உருவாக்கும்
பின்னணி, இஸ்லாமியப் பெண்களின் துயரம், சித்தராமையா மீது செய்யப்பட்ட விஷமப் பிரச்சாரம்
என்று பல தளங்களில் கட்டுரைகள் விரிகிறது.
லிங்காயத்
மதத்தின் தோற்றமும் அதன் சீர்திருத்தக் கருத்துக்களும் எப்படி தந்திரமாக இந்து மதத்தால்
நீர்த்துப் போக வைக்கப்பட்டது என்பது பற்றியும் தாங்கள் ஏன் தனித்த மதம் என்று லிங்காயத்துக்கள்
போராட்டம் நடத்துகின்றனர் என்பதும் இதனால் யெடியூரப்பாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றியுமான கட்டுரை மிக முக்கியமானது.
அந்த
போராட்டத்தின் கருத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமானவராக கௌரி லங்கேஷ் இருந்தார்
என்பதால்தான் அவரை காவிகள் குறி வைத்தார்களோ என்று இந்த நூலைப் படிக்கையில் தோன்றியது.
No comments:
Post a Comment