இன்று
காலை செய்தித்தாளை எடுத்ததுமே கண்ணில் பட்டு எரிச்சல் ஊட்டிய செய்தி கீழே உள்ளது.
டிசம்பர்
முப்பத்தி ஒன்றாம் தேதி புத்தாண்டை மக்கள் உற்சாகமாகக் கொண்டாட எந்த வித தடையும் இருக்கக்
கூடாது. விடுதிகளுக்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் இருக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி
இளைஞர் அணியின் தலைவரும் பால் தாக்கரேயின் பேரனுமான ஆதித்ய தாக்கரே மஹாராஷ்டிர மாநில அரசுக்கு
கோரிக்கை வைத்துள்ளார்.
வணிகம்
அதிகமாக பெருகுவதற்கு உதவிகரமாக இருப்பதால் அக்கோரிக்கையாம். ஒரு நாள் மட்டுமல்ல, வருடத்தின் அனைத்து நாட்களிலும்
எந்த தடையோ கட்டுப்பாடோ இருக்கக் கூடாது என்று மஹாராஷ்டிர மாநில ஹோட்டல் உரிமையாளர்கள்
சங்கம் அக்கோரிக்கையை இன்னும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
புத்தாண்டு
பிறக்கும் நள்ளிரவில் என்னய்யா வணிகம் நடக்கப் போகிறது?
மது
பாட்டில்கள் விற்பனையை அதிகரிக்கவும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நட்சத்திர
விடுதிகள் கல்லா கட்டவும் சிவசேனா அனுமதி கேட்கிறது. தங்கு தடையற்ற மது விற்பனை முதலாளிகளுடைய
லாபத்தை அதிகரிக்கும்.
குடிபோதையை ஊக்கிவிக்கும் இந்த கட்சிக்கு கலாச்சாரக் காவலர்கள் என்று பெத்த பெயர் வேறு.
புராணங்களில் சொல்லப்படுகிறதே, இந்திர லோகத்தில் சோம பானம், சுரா பாணம் ஆறாக ஓடியது என்று, அந்தக் கலாச்சாரப் பாதுகாவலர்களா இவர்களா?
No comments:
Post a Comment