Monday, December 3, 2018

பராசக்தி -பார்ப்போம், பரப்புவோம்



சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கௌரவிக்கக் கூடிய விதத்தில் அவர் வசனம் எழுதி வரலாறாகிய பராசக்தி படத்தை ஒளி பரப்ப இருந்தார்கள்.

ஆனால் காவிகள் உள்ளே புகுந்து குழப்பமேற்படுத்தி பராசக்தி படத்தின் திரையிடலை தடுத்து விட்டார்கள். பராசக்தி படத்திற்குப் பதிலாக மலைக்கள்ளன் படத்தை திரையிட்டுள்ளார்கள்.

அறுபது வருடங்களுக்குப் பிறகும் காவிகள் பராசக்தி திரைப்படத்தை, அதன் அனல் கக்கும் வசனங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

“கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது”

“பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது”

“பராசக்தி எந்த காலத்திலடா பேசினாள்”

என்ற இடி முழக்கங்கள் அவர்களின் இதயத்தை நடுங்க வைக்கிறது. வயிற்றை கலக்க வைக்கிறது.

அய்யப்பனையும் அயோத்தி ராமனையும் வைத்து கலவர அரசியல் நடத்தும் காவிக்கயவர்கள், கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது என்ற வசனம் கேட்கும் மக்களுக்கு கத்துவாவில் ஆசிபாவுக்கு நடந்த அவலமும் சிலைத் திருட்டு கேவலமும் நினைவுக்கு வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி விட்டார்கள்.

அதனால்தான் பராசக்தியை திரை போட்டு மறைத்து விட்டார்கள்.

அவர்கள் மறைத்தால் என்ன? நாம் பல்லாயிரம் முறை பகிர்ந்து கொண்டே இருப்போம்.

இந்தியத் திரை வரலாற்றின் மறக்க முடியாத நீதிமன்றக் காட்சி இங்கே



பராசக்தி திரைப்படத்தினை முழுமையாக கண்டு களிக்க இங்கே இணைப்பு    உள்ளது.

பராசக்தியை பார்க்க பார்க்க காவிகளுக்கு எரிச்சல் வருமென்றால் நாம் வாய்ப்புள்ள அனைத்து முறைகளிலும் பகிர்ந்து அந்த எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டே இருப்போம்.

பிகு

நீதிமன்றக் காட்சியின் காணொளியை நான் கேட்டவுடன் அனுப்பிய எங்கள் தோழர் ஆரோக்கியராஜிற்கு நன்றிகள் பல. 

6 comments:

  1. பராசக்தியை பார்க்க பார்க்க காவிகளுக்கு எரிச்சல் வருமென்றால் நாம் வாய்ப்புள்ள அனைத்து முறைகளிலும் பகிர்ந்து அந்த எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டே இருப்போம். ************** let china coolies continue to consume secular excreta. None will bother.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிலிலேயே பயம் தெரியுதேடா பொறுக்கி

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அருமை... கேட்கும் போதே இங்குள்ள இழி நிலை மாறாமல் இருக்க காவிகள் செய்யும் அனைத்து அவலங்களும் புரிகிறது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete