அம்மா
கிங்காங் என பெயரிட்டு அழைத்தார்,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் உணவு கொடுத்தார்,
நான்தான் பாஸ் என்றார்,
சிகை அலங்காரத்தை மாற்றச்சொல்லி உத்தரவிட்டார்,
உப்புமா சாப்பிட்டார்,
சீரியல் பார்த்தார்,
சினிமா பாட்டு கேட்டார்,
சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகவும்
கொட நாட்டு டீ தருவதாகவும் சொன்னார்.
என்றெல்லாம் விளக்கமாக கதை போல சொல்லி மரணத்தில் மர்மம் ஏதுமில்லை என்று நிரூபிக்க நடந்த நாடகத்திற்கான கூலிதான் ஒரு கோடியே பதினேழு லட்சம் என்றா அப்பல்லோ மருத்துவமனை கணக்கு எழுத முடியும்?
அதைத்தான் இட்லி சாப்பிட்ட கணக்காக காண்பித்து விட்டார்கள். ஒரு இட்லியின் விலை எழுபத்தி ஏழாயிரம் என்று கணக்கு போடுவது நம் தவறு.
யானைக்கு அல்வா வாங்கிய வகையில் . . .
குதிரைக்கு குலோப் ஜாமூன் வாங்கிய வகையில் . . .
என்று பொய்க்கணக்கு எழுதிய பாரம்பரியத்தை பாதுகாக்கிற அப்பல்லோ மருத்துவமனைக்கு பாராட்டுக்களை சொல்லுங்கய்யா !!!
No comments:
Post a Comment