Saturday, December 8, 2018

பாத்து போங்கய்யா! பதறுது . . .


நேற்று சென்னை போய் விட்டு இரவு வேலூர் திரும்பிக் கொண்டிருந்தோம். 

இரவு பதினோறு மணியைக் கடந்திருந்தது. சுங்குவார் சத்திரத்திற்கு கொஞ்சம் முன்பாக ஒரு இளைஞன், எங்கள் வாகனத்தை அதி வேகமாகக் கடந்தான். ஆக்டிவா தான். தலையில் ஹெல்மெட் இல்லை. முன்னே செல்லும் கார்களையும் லாரிகளையும் வேகம் வேகமாக கடந்ததும், இரண்டு லாரிகளுக்குள் நுழைந்து நுழைந்து வளைந்து நெளிந்து சென்றதும் மனதை பதற வைத்தது.

ஜாக்கிரதையாக செல்லுப்பா என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் எங்கோ வேகமாக புள்ளியாய் மறைந்து போய் இருந்தான்.

என்னதான் அதிவேகமாக பறந்தாலும் கிடைக்கக் கூடிய உபரி நேரம் என்பது அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ. 

உயிரை விட, விபத்தினால் உருவாகும் உபாதைகள் தரும் வலி மற்றும் அவதிகளை விட அந்த ஒரு மணி நேரம் முக்கியமா? 

ஒரு தகப்பனாக, விபத்தின் விளைவுகளை அறிந்தவனாகச் சொல்கிறேன்.

பார்த்துப் போங்கய்யா! ஜாக்கிரதையா போங்கய்யா!!

1 comment:

  1. உண்மைதான். சாலையில் விரையும் இளைஞர்களைக் கண்டால் மனம் பதறத்தான் செய்கிறது

    ReplyDelete