Sunday, December 30, 2018

பெரும் புளுகாண்டி ஜெயமோகன்



ஜெயமோகன் தளத்தில் கடுமையான வசை இருந்ததாலும் காவிகள் கலாட்டா செய்ததாலுமே தோழர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “தாண்டவபுரம்” நாவலை கடந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்கினேன்.

போன வாரம்தான் அந்த நூலை படித்து முடித்தேன். அந்த நூல் குறித்து எழுதும் முன்பாக தோழர் ஆதவன் தீட்சண்யாவால் “உளறுவாயன்” என்று அன்போடு அழைக்கப்படுகிற ஜெமோ, நாவல் குறித்து எழுதியதை மீண்டும் படிக்க, அந்த தளத்திற்கு மீண்டும் சென்றேன்.

அப்போதுதான் ஜெயமோகன் ஒரு மிகப் பெரிய புளுகாண்டி என்பதற்கான இன்னொரு ஆதாரம் அவரது தளத்திலேயே கிடைத்தது.

தோழர் டி.செல்வராஜ் மற்றும் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் ஆகியோருடைய நூல்களைப் பற்றி 2013 ம் ஆண்டில் வசை பாடுகிறார். வழக்கம் போல் கோல்கேட் பேஸ்ட் விளம்பரம் போல அழகியல் இல்லை, உள்ளுணர்வு இல்லை, உப்பு இல்லை, கரி இல்லை என்று திட்டுகிறார்.

ஆனால் அதுவே மூன்றாண்டுகள் கழித்து

சோலை சுந்தரப்பெருமாள் அல்லது டி.செல்வராஜ் எதையாவது பொருட்படுத்தும்படியாக எழுதிவிடமுடியும் என நான் நினைக்கவில்லை. ஆகவே அந்நூல்களைப் படிக்கவில்லை. படிக்கப்போவதுமில்லை

என்று பந்தா காண்பிக்கிறார்.

தேதி வாரியாக அவர் எழுதியதை படியுங்கள்.

14.01.2013

டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது

இப்போது வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.

அவரது விருதுபெற்ற தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது. இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

18.07.2013

சோலை சுந்தரப்பெருமாளின் நாவல் பெரும்சான்று. அதைப்பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று பலர் கேட்டனர். அது முதன்மையாக ஒரு நாவலே அல்ல. உள்நோக்கம் கொண்ட கீழ்த்தரமான ஜோடனை. கலையோ வாழ்க்கைப்பார்வையோ இல்லாதது

அத்துடன் அதில் தகவல்பிழைகள் என சொல்லமுடியாது, அது சொல்லும் எல்லா தகவல்களுமே பிழைதான்.


18.07.2016

சோலை சுந்தரப்பெருமாள் அல்லது டி.செல்வராஜ் எதையாவது பொருட்படுத்தும்படியாக எழுதிவிடமுடியும் என நான் நினைக்கவில்லை. ஆகவே அந்நூல்களைப் படிக்கவில்லை. படிக்கப்போவதுமில்லை. இந்தப்பகுதிகளை (அதாவது வழக்கம் போல, அவரே கேள்வி, அவரே பதில்) வாசிக்கையில் சீண்டும் நோக்குடன் திட்டமிட்டு எழுதப்பட்டது எனத் தெரிகிறது.

2013 ல் இரண்டு தோழர்களின் எழுத்துக்களைப் பற்றி கடுமையாக திட்டி விட்டு 2016 ல் அவர்களின் நூல்களை படிக்கவில்லை.  படிக்கப் போவதுமில்லை, என்று எழுதுவதிலிருந்தே தெரிகிறது ஜெயமோகன் ஒரு மிகப் பெரிய புளுகாண்டி என்று.

இதிலே எப்போது வாய் திறந்தாலும் “அறம், முறம்” என்று அளந்து விடுவதில் மட்டும் குறைச்சலே இல்லை.

5 comments:

  1. அடப்பாவி, சர்க்கார் கதைத் திருட்டுலயே இவன் வேஷம் கலைஞ்சு போச்சு

    ReplyDelete
  2. ஜெமோவின் தடம் புரளளை ஒரு பக்கம் இருக்கட்டும்
    தாங்கள் சொன்ன அதே 2016 பதிவில் அவர் சுமத்தும் இடதுசாரிகள் மீதான குற்றசாட்டு பற்றி தங்கள் கருத்து என்ன ?
    லீனா மேல் தாக்குதல் நடக்கும் போது நான் நேரடி சாட்சி செய்தது இடது சாரிகள் தான்
    (அப்புறம் உங்கள் கட்சி அல்ல வேறு கட்சி என்று ஜகா வாங்க கூடாது )
    கேரளா வன்முறை பற்றியும் சொல்லி இருக்கார்
    தங்கள் கருத்து என்ன ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கள் பற்றி விபரம் அறிந்து கொண்டு எழுதுகிறேன். ஆனால் ஜெயமோகன் சொல்லி இருந்தால் அதை நம்ப நான் தயாராக இல்லை. அந்த மனிதனைப் போன்ற பொய்யனை வேறெங்கும் நான் கண்டதில்லை.

      என்னிடம் கருத்து கேட்கும் நீங்கள் ஜெயமோகன் பற்றி நான் சொன்னதைப் பற்றி கருத்து சொல்லி இருக்க வேண்டும். அதை ஒதுக்கி விட்டு பேசுவது சரியல்ல

      Delete
    2. இரண்டு நூல்களையும் படித்து இருக்கின்றார்

      படித்து செம காண்டாகி இருக்கின்றார்

      எழுத்தாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் 2016 இல் சொல்லி இருக்க வாய்ப்புண்டு
      அல்லது விவாதத்தை மேட்கொண்டு செய்யாமல் இருக்க இப்படி சொல்லி எஸ்கேப் ஆகி இருக்க வாய்ப்புண்டு

      எந்த வாய்ப்பானாலும் 2016 இல் சொன்னது பொய்

      பொய்க்கான காரணம் எதுவாக இருக்கலாம்
      .
      .
      இப்படி பொய்களை ஜெமோ எதிர்ப்பாளர்கள் பலர் சொல்ல கேட்டிருக்கின்றேன்

      ராஜன் குறை கிருஷ்ணா அவர்கள் ஜெமோ தளத்தை படிப்பதேயில்லை என்று அடிக்கடி சொல்வார் . ஆனால் ஜெமோவின் பதிவுகளுக்கு பதில் பதிவுகளை மறக்காமல் செய்வர்

      Delete
    3. கேரளா அரசு ஒன்றும் யோக்கியமான அரசு அல்ல
      மாவோயிஸ்ட் போராளிகளை கூட 2016 இல் கொலை செய்தார்கள்

      Delete