இரண்டு நாட்களாக முகநூலில் உலா வரும் செய்தி இது.
நரேந்திர மோடி புகைப்படத்துடனான ஒரு பேனருடன் ஒரு லாரி கஜா புயல் தாக்கிய இடங்களில் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கிளீனர் கூட உடன் இல்லாமல் டிரைவர் மட்டும் சாலைகளில் அங்கேயும் இங்கேயும் போய்க் கொண்டிருக்கிறார்.
மக்கள் மடக்கிக் கேட்டதும்தான் உண்மை தெரிந்துள்ளது.
அந்த லாரியில் ஒரு பொருளும் கிடையாது. ஆனால் பாஜக ஏதோ நிவாரணம் வழங்குவதாக வெட்டி சீன் போடுவதற்காக செய்யப் பட்ட மோசடி வேலை இது.
இதெல்லாம் ஒரு பிழைப்பு!
இதைச் செய்வது ஒரு மத்திய ஆளும் கட்சி!!
இந்த வெட்கம் கெட்டவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாம்!!!
பிகு 1
அந்த காலி லாரியை மக்கள் மறிக்கும் காணொளியைப் பார்த்த பிறகுதான் இந்த பதிவை எழுதுகிறேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது புகைப்படங்கள், அந்த காணொளியிலிருந்து எடுக்கப் பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகளே.
பிகு 2
இதை எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் இதே ஃப்ராடு வேலையை கேரளத்திலும் செய்து கையும் களவுமாக பிடிபட்டார்கள் என்ற செய்தியும் நினைவுக்கு வந்தது.
இதைவிட,
ReplyDeleteநிவாரணப் பொருட்கள் வழங்கியதாக, ஃபோட்டோஷாப் செய்து, இணையதளங்களில் போட்டிருந்திருக்கலாம்!
ஹாஹாஹா!!!
இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்
ReplyDelete