Saturday, December 22, 2018

அங்கே மரணித்தது ???????

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க சென்று கொண்டிருக்கிறோம் என்று டிசம்பர் ஆறாம் நாள் எழுதியிருந்தேன்.

அதற்குப் பிறகு தொடர்ச்சியான வேலைகள் வந்து விட்டதாலும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளாலும் அந்த அனுபவம் குறித்து எழுதுவதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. 

“தானே” புயல் தாக்கப்பட்ட சமயத்தில் கடலூர் சென்றிருந்தோம். அதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் “கஜா” தாக்குதல் மிக மோசமாகவே இருந்துள்ளது.

தஞ்சையைக் கடந்து பட்டுக்கோட்டை சாலையில் பயணிக்கத் தொடங்கிய உடனேயே கஜா உருவாக்கிய கோரம் புரியத் தொடங்கியது.

சாலை ஓரங்களில் இருந்த பெரு மரங்களெல்லாம் வேரோடு வீழ்ந்து கிடந்தது.



தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட கொடுமைதான் மிகவும் சோகம். நாங்கள் பார்த்த தென்னந்தோப்புக்கள் எல்லாவற்றிலும் குறைந்த பட்சம் 90 % தென்னை மரங்கள் விழுந்து கிடந்தது. அந்த மரங்களை நம்பி வாழ்க்கை நடத்தியவர்களின் நிலையை நினைத்தால் மிகவும் கவலையாகவே உள்ளது.




என கண்ணில் பட்ட இடமெல்லாம்

காணாமல் போன குடிசைகளின் இடிபாடுகள், காற்றில் ஓடுகள் பறந்து போனதால் வானமே கூறையாக காட்சி அளிக்கும் வீடுகள், மாடிகள் மீது அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் அல்லது தகர ஷீட்டுக்கள் கஜாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் எங்கோ போய் ஒளிந்து கொண்ட அவலம், இடிந்து போன காம்பவுண்ட் சுவர்கள், உடைந்து கிடக்கும் மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள்

என்று

கஜா தாக்குதலின் அழிவுச் சின்னங்கள்தான்.

அத்தோடு எடுபிடி அரசின் அலட்சியமும்தான்.

ஆமாம்.

சாலையின் நடுவே விழுந்த மரங்களை அப்படியே ஓரத்தில் போட்டுள்ளனரே தவிர அவற்றை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.

அவை சடலங்களாக காட்சியளித்து துயரத்தை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. 

அது அரசு இயந்திரமும் மரணித்து விட்டது என்பதை காண்பித்துக் கொண்டே இருந்தது. 

பதிவு தொடரும் . . .

1 comment: